செய்திகள் :

Coonoor: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து; நள்ளிரவில் கடைகள் எரிந்து சேதம்

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த சந்தையில் உள்ள கடைகளை வணிகர்கள் மாத வாடகை செலுத்தி வணிகம் செய்து வருகின்றனர்.

பழைமையான இந்த மார்கெட் கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டிக் கொடுக்க அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து

கட்டுமானத்தை தொடங்கவும் மாற்றிடத்தில் தற்காலிக கடைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேகமாக அருகில் இருந்த 10-க்கும் அதிகமான கடைகளுக்கு தீ பரவியிருக்கிறது.

தகவலறிந்து விரைந்த குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். கட்டுக்கடங்காத தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்த நிலையில், ராணுவ வீரர்களும் தீயை அணைக்க களமிறங்கியுள்ளனர். விடிய விடிய போராடி அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து

இந்த தீ விபத்தில் நகைக்கடைகள், பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட 16 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்வாதாரமாக விளங்கி வந்த கடைகளும் முதலீடும் தீயில் சாம்பலானதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video

​மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத... மேலும் பார்க்க

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன?... மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகே விபத்து; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது படங்களில் நடிக்காமல் மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்ல... மேலும் பார்க்க

பெங்களூருவில் 100 அடி தேர் சரிந்து விழுந்து இருவர் பலி - விபத்துக்கு காரணம் என்ன?

பெங்களூரு ஆனேகலில் உள்ள மதுரம்மா கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்துள்ளது. இந்தத் தேரின் உயரம் கிட்டதட்ட 100 அடி ஆகும். நேற்று மாலை சுமார் 6 மணியளவில், இந்த தேர்கள் வீதிகளில் வலம் வந்துகொண்டிருந்தப் ... மேலும் பார்க்க

Ooty: ``குதறிய நிலையில் பெண் சடலம்..'' - புலியா? சிறுத்தையா? குழப்பத்தில் வனத்துறை! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் தொட்டபெட்டா மலைச்சரிவில் அமைந்திருக்கிறது காலி பெட்டா பகுதி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை தேயிலை பறிக்கச் சென்ற அஞ்சலை என்கிற 50 வயது ப... மேலும் பார்க்க

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும்... மேலும் பார்க்க