இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது: அநுர திசந...
CSK : ருத்துராஜ் இல்லாத சிஎஸ்கே; ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? - என்னென்ன மாற்றங்கள்?
'ருத்துராஜூக்கு காயம்!'
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயமடைந்திருந்தார். அந்த காயத்திலிருந்து அவர் இன்னும் மீளாத நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி சென்னை அணியை வழிநடத்தக்கூடும் என பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியிருக்கிறார்.

கேப்டன்சி விஷயத்தில் பிரச்னையில்லை. தோனி கேப்டன்சியை பார்த்துக்கொள்வார். ஆனால், ஒரு பேட்டராக ருத்துராஜ் இல்லாத இடத்தை யார் நிரப்புவார். ருத்துராஜ் இல்லையெனில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்?
'மாற்று வீரர் - டெவான் கான்வே?'
முதலில் ருத்துராஜ் இல்லாத இடத்தை யாரை வைத்து நிரப்ப முடியும் என்பதை பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணி அதற்கு பெரிதாக சிரமமெல்லாம் படத் தேவையில்லை. பெவிலியனில் டெவான் கான்வே இருக்கிறார். அவரை அந்த ஓப்பனிங் ஸ்லாட்டுக்குக் கொண்டு வந்துவிடலாம்.

ஆனால், கான்வே உள்ளே வரும்பட்சத்தில் அந்த 4 வெளிநாட்டு ஸ்லாட்களில் பிரச்னை வரும். இப்போதைக்கு சென்னை அணியின் லெவனில் ரச்சின் ரவீந்திரா, நூர் அஹமது, பதிரனா, ஓவர்டன்/ சாம் கரண் என 4 வீரர்கள் அந்த 4 ஸ்லாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். டெவான் கான்வே உள்ளே வர வேண்டுமெனில் அந்த நால்வரில் ஒருவரை ட்ராப் செய்ய வேண்டும். அதிலுமே கூட பெரிய சிரமம் இருக்காது. ஓவர்டன்/சாம் கரண் இறங்கும் அந்த நான்காவது ஸ்லாட்தான் இன்னும் க்ளிக் ஆகவில்லை. ஆக, ஓவர்டனை ட்ராப் செய்துவிட்டு கான்வேயை உள்ளே அழைத்து வந்துவிடலாம்.
'கான்வே எங்கே இறஙகுவது?'
கான்வே லெவனுக்குள் வந்தாலும் ஓப்பனிங் இறங்குவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, ருத்துராஜ் நம்பர் 3 இல் தான் இறங்கி வருகிறார். அதற்காக கான்வேயை நம்பர் 3 இல் இறக்க முடியாது. ஏனெனில் அவர் முழுக்க முழுக்க ஒரு ஓப்பனிங் வீரர். அவரை ஓப்பனிங் இறக்கினால்தான் அவரின் முழுமையான திறனும் வெளிப்படும். ஆனால், ஓப்பனிங்கில் ரச்சினும் திரிபாதியும் இறங்குகிறார்கள். திரிபாதியால் நம்பர் 3 இல் ஆட முடியும். ஆனால், Left - Left காம்பினேஷனாக ரச்சினும் கான்வேயும் இறங்குவது அவ்வளவு சரியாக இருக்காது.
அதேநேரத்தில், ரச்சினை நம்பர் 3 இல் இறக்கினால் கான்வேயும் திரிபாதியும் ஓப்பனிங் ஆடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. திரிபதியின் ஃபார்மும் பிரச்னையாகத்தான் இருக்கிறது. திரிபாதியை ட்ராப் செய்ய வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். ஆனால், திரிபாதி மீது சென்னை அணி இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறது. அதனால் திரிபாதியை ட்ராப் செய்ய வாய்ப்பில்லை.
'அஷ்வினின் நிலை!'
அதேமாதிரி, அஷ்வினும் லெவனில் இருப்பாரா மாட்டாரா எனும் கேள்வி எழுந்திருந்தது. அஷ்வினையும் அத்தனை சீக்கிரத்தில் சென்னை அணி ட்ராப் செய்ய வாய்ப்பில்லை. அதுவும் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் அஷ்வினை கட்டாயம் நம்புவார்கள். ஆக, ருத்துராஜ் இல்லாத இடத்துக்கான மாற்றங்கள் மட்டுமே அணியில் இருக்கும்.
'கான்வே ஓப்பனிங!'
அதிகபட்சமாக திரிபாதியும் கான்வேயும் ஓப்பனிங் இறங்குவார்கள். ரச்சின் நம்பர் 3 இல் இறங்குவார். கடைசியாக 2023 சீசனின் இறுதிப்போட்டியில் கேப்டனாக செயல்பட்ட தோனி, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக என்ட்ரி கொடுப்பார்.

யதார்த்தமாக சென்னை அணியில் நடக்கவுள்ள மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இவைதான். இதைத்தாண்டி நீங்கள் சென்னை அணியின் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்க வேண்டும் என விரும்பினால் அதை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்.