சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
CSK vs MI : `விக்னேஷ் புத்தூர் எங்களின் பெருமைமிகு கண்டுபிடிப்பு' - சூர்யகுமார் நெகிழ்ச்சி
சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அசத்தியிருந்தார். மும்பை அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பில் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் அறிமுக பௌலர் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார். இந்நிலையில், போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, 'நாங்கள் 15-20 ரன்களைக் குறைவாக எடுத்துவிட்டோம். ஆனாலும் கடைசி வரை போராடியதில் மகிழ்ச்சி. மும்பை அணி நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. எங்களின் Scouting குழு சீசன் இல்லாத 10 மாதங்களும் இப்படியான இளம் வீரர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது.
எங்களின் திறன் தேடல் குழுவின் வெற்றிதான் விக்னேஷ் புத்தூர். போட்டி கடைசி வரை சென்றால் டெத்தில் அவருக்கு ஒரு ஓவரை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவரின் ஒரு ஓவரை மீதம் வைத்திருந்தேன். ருத்துராஜ் ஆடிய விதம்தான் எங்களிடமிருந்து போட்டியை பறித்தது என நினைக்கிறேன்.' என்றார்.

2012 க்குப் பிறகு நீங்கள் முதல் போட்டியை வெல்லவில்லை. ஆனால், 5 முறை கோப்பையை வென்றிருக்கிறீர்கள். இந்த முறையும் கோப்பையை வெல்லப்போகிறீர்களா? என ரவி சாஸ்திரி கேட்க, 'நீங்கள் சொல்வதைக் கேட்பதில் மகிழ்ச்சி. ஆனால், இது பெரிய சீசன். நீண்ட பயணத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.' என்றார்.