தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: க...
Delhi Election Result Live: ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ் - டெல்லி அரியணை யாருக்கு?! | Live Updates
டெல்லி சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஆளும் ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்று மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறு முடிந்தது. இதில், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 60.42 சதவிகித வாக்குகள் மட்டும் பதிவாகின.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/5iy9pmy8/WhatsApp-Image-2025-02-05-at-18.57.34.jpeg)
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க ஆட்சியமைக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் இவை வெறும் கருத்துக்கணிப்பு மட்டுமே என்பதால், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வருமா, பா.ஜ.க ஆட்சிக்கு வருமா, இந்த இரண்டும் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா என்பது மக்களிடத்தில் எதிர்பார்ப்பைக் கூடியிருக்கிறது. அதற்கு விடையாக, நாளை காலையில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.