Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!
Delhi: 'சட்டியில் இல்லை' - பாஜக வாரி வழங்கிய வாக்குறுதிகள்... பட்ஜெட்டில் துண்டு விழுமா?!
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.
பாஜக-வின் இந்த வெற்றிக்கு ஆம் ஆத்மி கட்சி மீது தொடர்ந்து வந்த ஊழல் புகார்கள் ஒரு பக்கம் காரணம் என்றாலும், இன்னொரு பக்கம் அவர்கள் அள்ளி தெளித்த வாக்குறுதிகளும் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-05/gqs0y31t/images__3_.jpg)
இந்த வாக்குறுதிகள் மிக முக்கியமானவை...
மாதா மாதம் பெண்களுக்கு ரூ.2,500;
உதவி தேவைப்படுபவர்களுக்கு கே.ஜி வகுப்பு முதல் பி.ஜி வரை இலவச கல்வி;
ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், கிக் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.10 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு;
60 வயதுக்கு மேல் உள்ளோர்களுக்கு மாதம் ரூ.2,500 பென்சன் தொகை மற்றும் 70 வயதுக்கு மேல் உள்ளோர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் தொகை;
கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ரூ.2,500;
ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்;
ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச கேஸ் சிலிண்டர்.
இதையும் தாண்டி பல வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கிறது பாஜக. ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றும் அளவு டெல்லி கல்லாவில் பணம் இருக்கிறதா என்று பார்த்தால், 'இல்லை' என்பது தான் பதில்.
சமீபத்திய தரவுகளின் படி, டெல்லிக்கு வரி மூலம் வரும் வருமானம் ரூ.57,750 கோடி ஆகும். ஆனால், டெல்லியின் மொத்த பட்ஜெட் தொகை ரூ.76,000 கோடி ஆகும்.
இப்போதிருக்கும் திட்டங்களேயே தொடர்ந்து செயல்படுத்த டெல்லி அரசுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வேண்டும். இதுபோக, கட்டமைப்புகள், திடீர் தேவைகள், புதிய திட்டங்களுக்கு இன்னமும் பணம் தேவைப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இப்போது பாஜக அளித்துள்ள பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதிக்கு மட்டும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி தேவை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/c8035f97-fbe5-4ee4-8b5d-dc67384cadf1/sunrise_4798911_960_720.jpg)
இன்னும் உள்ள செலவுகள்...
யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ.8,000 கோடி;
மருத்துவமனைகளை புதுப்பிக்க ரூ.10,200 கோடி;
மெட்ரோ மூன்று மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்கு ரூ.2,700 கோடி
இப்படி பாஜக அரசின் ஒவ்வொரு வாக்குறுதிகளுக்கும் ஆயிரம் கோடி கணக்கில் பணம் தேவை.
குறைந்த அளவே டெல்லியின் வருமானம் இருக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகளுக்கு டெல்லி அரசு என்ன செய்யும்...மத்திய அரசின் உதவியை நாடுமா என்பதற்கான பதில் அடுத்த மாதம் தாக்கல் ஆக உள்ள டெல்லி பட்ஜெட்டில் விடை கிடைக்கும்.
சட்டியில் இல்லை...அகப்பையில் எப்படி வரும்?!