செய்திகள் :

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

post image

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள்.

குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் காரணம் என்றும், எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் மருத்துவர். இது எந்த அளவுக்கு உண்மை... உடல் பருமனால் குழந்தையின்மை பிரச்னை வருமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உடல் பருமன் காரணமாக ஆண், பெண் இருவரின் உடலிலும் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்கும்போது, அதன் விளைவாக அவர்கள் இருவருக்குமே தாம்பத்திய உறவிலும் சிக்கல் வரும்... அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பதிலும் சிக்கல் வரலாம்.

உடல் பருமனின் காரணமாக கொழுப்பின் சதவிகிதம் அதிகரிப்பதன் விளைவாக, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலை உருவாகும். இந்நிலையில்,  நம் உடலின் செல்கள் இந்த இன்சுலினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். 

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலையின் காரணமாக,  ஆண் உடலில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்கள் சுரப்பதும் குறையத் தொடங்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் விந்தணுக்கள் சரியாக உற்பத்தியாகாது. அப்படியே உற்பத்தியானாலும் அவற்றின் தரம் சரியாக இருக்காது.

பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம்.

அதேபோல விறைப்புத்தன்மையில் சிக்கல் வரும். உடல் பருமனின் முக்கிய அடையாளமாக ஆண்- பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் அதிக சதை போடும். அந்த இடத்துப் பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம். 

பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் குறைவதால், கருமுட்டைகளின் தரம் குறைவாக இருக்கும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். மாதவிடாய் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து குழந்தை தங்கும் வாய்ப்பைக் குறைக்கும். 

உடல் பருமன்

எனவே, உடல் பருமன் என்பது தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்து உறுப்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்துவதைப் போலவே, இல்லற வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, குழந்தைப் பேற்றையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். குழந்தைக்கான முயற்சியில் இருக்கும் தம்பதியர், உடல் பருமனோடு இருந்தால், இந்த விஷயங்களை முதலில் கவனத்தில் கொண்டு, எடையைக் குறைப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல... மேலும் பார்க்க

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

பாபநாசம்பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்... மேலும் பார்க்க

``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. இரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?

''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதி... மேலும் பார்க்க