செய்திகள் :

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

post image

Doctor Vikatan:  கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். 

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த நினைப்பது தவறு.

கண் தொடர்பான பிரச்னைகளுக்கு தாய்ப்பால் விடுவது நிச்சயம் தவறானதுதான். ஒரு குழந்தைக்கு கண்களில் இன்ஃபெக்ஷன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியா கிருமிகள், கண்களில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனை மேலும் தீவிரமாக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும் கண்களில் தாய்ப்பால் விடுவதை தவிர்த்தாக வேண்டும்.

காலங்காலமாகத் தொடர்கிற இதுபோன்ற நம்பிக்கைகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டியது அவசியம்.

'கண்களில் கட்டி வந்தது... நாமக்கட்டியைக் குழைத்துப் போட்டேன்... சரியாகிவிட்டது' என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை அடிக்கடி பார்க்கிறேன். நாமக்கட்டி என்பது களிமண் மற்றும் சாம்பலின் கலவை தான்.  மருத்துவராக நான் அதை ஊக்கப்படுத்த மாட்டேன். 

கண்களில் கட்டி வந்து வீங்கும் பிரச்னையை 'ஸ்டை' (Stye) என்று சொல்கிறோம். அது ஒருவகையான தொற்று பாதிப்புதான்.

கண்களில் கட்டி வந்து வீங்கும் பிரச்னையை 'ஸ்டை' (Stye) என்று சொல்கிறோம். அது ஒருவகையான தொற்று பாதிப்புதான். அந்தத் தொற்றை ஏற்படுத்தியது பாக்டீரியா கிருமியாக இருக்கும். பாக்டீரியா கிருமித் தொற்றை குணப்படுத்த ஆன்டிபயாடிக் கொடுப்பது தான் சரியான சிகிச்சையாக இருக்கும். எனவே, கண் மருத்துவரைக் கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெந்நீர் ஒத்தடமும் கொடுத்தால் மட்டுமே இந்தக் கட்டி சரியாகும். நாமக்கட்டி போன்ற கைவைத்திய முறைகளைத் தவிர்ப்பதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' - அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

``எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' - கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?' என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. ஆன... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா' நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்ற... மேலும் பார்க்க

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில... மேலும் பார்க்க

Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்.. காரணம் என்ன?

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வரவேற்க அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது மண்டியிட்டு வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஐ... மேலும் பார்க்க