செய்திகள் :

Doctor Vikatan: சிறுநீரில் வித்தியாசமான வாடை... சர்க்கரைநோயின் அறிகுறியாக இருக்குமா?

post image

Doctor Vikatan: என் வயது 40. சிறுநீர் கழிக்கும்போது சில சமயங்களில் ஒருவித மருந்து வாடை வருகிறது.  சில சமயங்களில் வேறு வேறு வாடை வருகிறது. இது சுகர் இருப்பதற்கான அறிகுறியா? சிறுநீர் வாடைக்கு என்ன காரணம்.... எந்த வாடை ஏன் ஏற்படுகிறது என்று ஒருவரால் கண்டுபிடிக்க முடியுமா?  இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

மருத்துவர் நிவேதிதா

சிறுநீரில் வேறு வேறு வாடை அடிப்பதாகச் சொல்கிறீர்கள். மருந்து வாடை அடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?, அப்படி சில மருந்துகள் சிறுநீரில் வாடையை ஏற்படுத்தலாம். வாடையோடு சேர்த்து வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள்.

அதாவது, வாடை தவிர, சிறுநீரில் எரிச்சலோ, சிறுநீர் கழிக்கும்போது வலியோ, அடிவயிற்றில் வலியோ, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோ, கலங்கலாக  வெளியூறுவதோ இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருந்தால், உங்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம் என சந்தேகப் படலாம். நாம் உண்ணும் உணவுகளும் சிறுநீரின் நிறம் மற்றும் மாற்றக்கூடும். உதாரணத்துக்கு, பீட்ரூட் சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரின் நிறம் மாறும்.

யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட்...

குறிப்பிட்ட உணவு அல்லது பானம் எடுத்துக்கொள்ளும் போதெல்லாம் சிறுநீரில் வாடையை உணர்கிறீர்களா என்று கவனியுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்காதது இரண்டும் சிறுநீரின் நிறம் மற்றும் வாடையை மாற்றலாம். யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட் எல்லா லேப்களிலும் செய்யப்படும். அதைச் செய்து பார்ப்பதன் மூலம், எப்படிப்பட்ட அணுக்கள் வெளியேறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். ரிசல்ட்டை பொறுத்து, தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட வேறு சோதனைகளைச் செய்து கொள்ளலாம். இன்ஃபெக்ஷன் இருப்பது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட்டம்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியரசு தின ஆளுநர் உர... மேலும் பார்க்க