செய்திகள் :

Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதேன்?

post image

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, 'சுகர் வந்துருச்சா' என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள். நீரிழிவுக்கும் உடல் எடைக்கும் என்ன தொடர்பு, டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

நீரிழிவு மருத்துவர் பரணிதரன்

இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் மேலானோருக்கு நீரிழிவு இருக்கிறது. சுமார் 13 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய ப்ரீ டயாபட்டீஸ் நிலையில்  இருக்கிறார்கள். இந்த ப்ரீ டயாபட்டீஸ் கொண்ட 13 கோடி பேர் எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோயாளிகளாக மாறலாம். அந்த அளவுக்கு உடல்பருமனின் ஆபத்தும் உள்ளது.

நம்முடைய உணவில் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல்ரீதியான செயல்பாடுகள் குறைவாக உள்ளன. இதனால் எடை அதிகரிப்பு என்பதும், நீரிழிவு என்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய பிரச்னைகளாக உள்ளன. உடல் பருமன் இன்சுலின் வேலை செய்வதைத் தடை செய்வதால் 'இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்' எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குகிறது. அதனால் இந்தியாவில் உடல் பருமன் என்பது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய காரணிகளில் முக்கியமானதாகவும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வருவதைப் போல, அதிக தாகம் ஏற்படுவதைப் போல, அதிகம் பசி உணர்வு ஏற்படுவதைப் போல எடை இழப்பும்  முக்கியமான ஓர் அறிகுறியாகவே இருக்கும். அதனால்தான் சர்க்கரைநோய் வந்துவிட்டால் ஒருவரின் எடை குறைந்துவிடும் என்றும் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், இதில் மற்றொரு கோணமும் உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

எனவே, எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நீரிழிவு உள்பட பல பாதிப்புகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

``தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது'' - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியி... மேலும் பார்க்க

Aloor Shanavas Interview | DMK அரசை காப்பாற்றும் Thiruma? தலித் வாக்குகளை இழக்கும் VCK? | TVK | NTK

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan:என்னுடைய தோழியின் அப்பாவுக்கு கண்களில் ஸ்ட்ரோக் வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்ததாகவும் சொல்கிறாள். கண்களில் ஸ்ட்ரோக் வருமா, அதன் அறிகுறி எப்படியிருக்கும், எப்படி சரி செய்வது?பதில்சொல... மேலும் பார்க்க

Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்!

நடைப்பயிற்சி எனும் வாக்கிங் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம், எப்படி நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பலனும் கிடைக்கும் என்கிற விழிப்... மேலும் பார்க்க

ட்ரம்ப் சந்திப்பு: ``அமெரிக்கா காட்டிய `இந்த' முக்கிய சிக்னலைப் பாராட்டுகிறோம்'' - ஜெலன்ஸ்கி

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்புநேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். கடந்த 1... மேலும் பார்க்க

காற்றில் மிதக்கும்; செல்களுக்குள் செல்லும்; மைக்ரோ பிளாஸ்டிக் பற்றிய கம்ப்ளீட் விளக்கம்!

பெண்ணின் கருமுட்டையில்கூட நேனோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எப்படி ரத்தத்தில் கலக்கிறது என்பதற்கான காரணம், இதுவரை சரிவர தெரியவில்லை. என்றாலும் குடலில் சேரும் நேனோ பிளாஸ... மேலும் பார்க்க