செய்திகள் :

Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?

post image

Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது பிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான் கேட்கிறார்கள். உண்மையில், பிரியாணியில் எது பெஸ்ட், எது ஆரோக்கியமானது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

பிரியாணி பிரியர்களைக் கேட்டால், மட்டன் பிரியாணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளைக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கிறது மட்டன் பிரியாணி. அதை சுவையாகவும் சமைக்க முடியும். 

சுவையில் சூப்பராக இருக்கும் மட்டன் பிரியாணி, ஆரோக்கியத்திலும் சிறப்பானதா என்பதுதான் கேள்வி.  ஏனென்றால், மட்டனில் கொழுப்புச்சத்து மிக மிக அதிகம். எனவே, இதய நோயாளிகள், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர் எல்லாம் இந்த பிரியாணியைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

அவர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டால் மீன் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி சாப்பிடலாம். அளவோடு இறால் பிரியாணி சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்களும் மட்டன் மற்றும் முட்டை பிரியாணி சாப்பிட முடியாது. அவர்களும் சிக்கன் பிரியாணி அல்லது ஃபிஷ் பிரியாணி சாப்பிடலாம். 

பிரியாணி என்றாலே அதிக கலோரி கொண்ட உணவு என்பதில் சந்தேகமில்லை.  அதில் சேர்க்கப்படுகிற எண்ணெய், நெய், மசாலா பொருள்கள், அசைவம் என எல்லாம் சேர்ந்து பிரியாணியின் கலோரியைக் கூட்டுகின்றன.  எனவே, அதை மாதத்தில் ஒருமுறையோ, 20 நாள்களுக்கொரு முறையோ சாப்பிடுவது சரியானது.

கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்களும் மட்டன் மற்றும் முட்டை பிரியாணி சாப்பிட முடியாது. அவர்களும் சிக்கன் பிரியாணி அல்லது ஃபிஷ் பிரியாணி சாப்பிடலாம்.

சிலர், தினமும் பிரியாணி சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார்கள். நள்ளிரவு, அதிகாலையில் எல்லாம் பிரியாணி சாப்பிடுவோர் இருக்கிறார்கள். அதெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.  அளவோடு சாப்பிட வேண்டியதும், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியதும் இதில் மிக முக்கியம்.

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், எப்போதாவது முட்டை பிரியாணி சாப்பிட நேர்ந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம். வெஜிடபுள் பிரியாணி மிக நல்ல சாய்ஸ். ஊட்டச்சத்து ஆலோசகர்களின் பரிந்துரைப்படி, ஐம்பது சதவிகிதத்துக்கும்  அதிகமாக காய்கறிகள் சேர்த்துச் செய்யப்படுகிற வெஜிடபுள் பிரியாணி மிகவும் ஆரோக்கியமானது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது'' - CPIM மாநாட்டில் ராஜூ முருகன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கதில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், "இந்த மாநாடு வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?

Doctor Vikatan: என் வயது 38. எனக்கு 20 ப்ளஸ் வயதிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்து தலைக்கு ஹென்னாதான்உபயோகிக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் தோழி சொன்னதன்பேரில், முதல் நாள... மேலும் பார்க்க

``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேசியது என்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாணவ... மேலும் பார்க்க

WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேற்றம்

12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப... மேலும் பார்க்க

எம்புரான்: ``முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" - கம்பத்தில் விவசாயிகள் போராட்டம்

அண்மையில் நடிகர் மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது. இத் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பெரியாறு வைகை பாசன... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்' படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ

மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக அதில் வரும் கலவரம் குறித்த சித்தரிப்புகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் வலதுச... மேலும் பார்க்க