அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கணையம், நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது.
மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்மையாக இருக்கக் கூடிய உறுப்பு. பல நன்மைகளைத் தரக்கூடிய கணையத்தைப் பாதுகாப்பது அவசியம். கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சமச்சீரான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அந்த வகையில் கணையத்தைப் பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றிய தொகுப்பு இங்கே…. வழங்கியவர் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் பிரசன்னா.

மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தினமும் உணவில் சிறிதளவு மஞ்சத்தூளைச் சேர்ப்பதால், நாம் புற்றுநோய்ப் பிடியிலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இரவில், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்த பாலை தினமும் அருந்தி வருவது நல்லது.
ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பொக்கிஷம் இந்தச் செர்ரி. செல்களின் பாதிப்பைத் தடுக்கும். பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, அந்தோசியானின், குவர்சிடின் போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும். கணையப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

இதில் உள்ள ரெஸ்வெரட்ரோல் (Resveratrol) எனும் சத்து, ஃப்ரீ-ரேடிக்கல்ஸ் போன்ற கெட்ட அணுக்களிலிருந்து கணையத்தைப் பாதுகாக்கும். பருவகாலச் சமயங்களில் கிடைக்கும் திராட்சைகளைத் தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது. சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸாகவும் குடிக்கலாம்.
மிட் மார்னிங் எனப்படும் காலை நேரத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி முதலிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது, கணையத்தைப் பலப்படுத்தும். அதேபோல, மதிய வேளையில், கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், கீரை ஆகியவற்றை ஜூஸாகவோ, சூப்பாகவோ சாப்பிடலாம்.

புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதை ‘ஸ்டீம் குக்’ முறைப்படி நீராவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
கணையத்தின் தோற்றம் போலவே இருக்கக் கூடிய கிழங்கு இது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதன் அடர்நிறத்தோலில் இருந்து பெறப்படும் பீட்டாகரோட்டின் எனும் சத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள காய்கறி வகைகளில் பீட்டா கரோட்டின் சத்து அதிகமாகவே இருக்கும். இந்த வகைச் சத்துகள் கொண்ட காய்கறிகள் புற்றுநோயில் இருந்து கணையத்தைப் பாதுகாக்கும்.

இது, கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும். புரோபயாடிக் எனும் நல்ல நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர், செரிமானத்துக்கு உதவும். கணையத்தின் மிக முக்கிய வேலை செரிமானம். எனவே தயிர் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை சேர்க்காத தயிராகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது, லஸ்ஸியாகக் குடிப்பதைத் தவிர்க்கலாம்.
பூண்டில் உள்ள அலிசின் (Allicin) எனும் பயோஆக்டிவ் சத்து, கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும். அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது.