செய்திகள் :

Google: ரூ.50,000 கோடி; ஆந்திராவில் `ஆசியாவின்' மிகப்பெரிய Data Center; கூகுளின் ப்ளான் என்ன?

post image

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கூகுள்
கூகுள்

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு பெரியத் தொகையை கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம், அதிக செலவில் கட்டப்படுவதும் இதுவே முதல் முறை.

இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

கூகுள்
கூகுள்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கூகுள் இந்த முதலீட்டைச் செய்கிறது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகுள் கிளவுட் இயக்குநர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

UPI: இன்று முதல் யு.பி.ஐ-யில் அமலுக்கு வரும் 7 ரூல்ஸ்; என்னென்ன தெரிந்துகொள்வோமா?

இன்று ஆகஸ்ட் 1. இன்று முதல் யு.பி.ஐ-யில் (UPI) ஒரு சில மாற்றங்கள் வர உள்ளதாக முன்னர் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...யு.பி.ஐ பரிவர... மேலும் பார்க்க

`AI தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்கும்?' - மைக்ரோசாப்ட் ஆய்வு சொல்வதென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு, ஏஐயால் இயக்கப்படும் சாட்பாட் தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.மைக்ரோசாப்டின் கோபைலட் (C... மேலும் பார்க்க

உஷார்: ``நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' - அனுபவ பகிர்வு

"என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு. கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ... மேலும் பார்க்க

``பெரிய நிறுவனங்கள் அபாயங்களை மறைக்கின்றன'' - எச்சரிக்கும் Godfather of AI

செயற்கை நுண்ணறிவின் காட் ஃபாதர் எனக் கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், அதன் வேகமான வளர்ச்சி ஏற்படுத்தும் ஆபத்துகளையும், பெரிய நிறுவனங்கள் அந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் விளைவுகளையும் குறித்து எச்... மேலும் பார்க்க

Google: 'ஸ்ட்ரீட் வியூவில் பதிவான நிர்வாண படம்' - கூகுள் வழங்க வேண்டிய இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ கார் அர்ஜெண்டினாவில் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததால், அந்த நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில், அர்ஜெண்டினாவின் ... மேலும் பார்க்க

Sam Altman: "என் மகன் கல்லூரிக்குச் செல்ல மாட்டான்; காரணம்..." - AI எதிர்காலம் குறித்து ChatGPT CEO

செயற்கை நுண்ணறிவு கருவிகள் வளர்ச்சிபெறத் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு துறைகள் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டு வருகின்றன. அடுத்ததாக கல்வியும் இந்தச் சூறாவளியில் சிக்கும் என ஆருடம் கூறியுள்ளார் ஓப்பன... மேலும் பார்க்க