செய்திகள் :

Hot mic: ``உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை; 150 ஆண்டுகள் வரை வாழலாம்'' - அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?

post image

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் குழுவாக நடந்து சென்றனர்.

இந்த நிகழ்வை சீன அரசுத் தொலைக்காட்சி சிசிடிவி நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

சீனா இராணுவப்படை அணிவகுப்பை பார்க்கும் தலைவர்கள்
சீனா இராணுவப்படை அணிவகுப்பை பார்க்கும் தலைவர்கள்

ரஷ்ய அதிபர் புதின், “உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாகி, அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்,” என்றார்.

அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சிலர் கணிக்கின்றனர்,” என்று கூறினார்.

இவர்களின் உரையாடலைக் கேட்டு வந்த கிம் ஜாங் உன் சிரித்த முகத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உரையாடல் அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “நவீன சுகாதார மேம்பாட்டு வழிகள், மருத்துவ முறைகள், மற்றும் உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை, மனிதன் இன்று வாழ்வதிலிருந்து வித்தியாசமாக, சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன,” என்றார்.

இரு நாட்டு தலைவர்களும் பேசிக்கொண்ட செய்தியை இதுவே உறுதிப்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5)... மேலும் பார்க்க

``நயினாரின் செயல் வருத்தத்தைக் கொடுத்தது; அதிமுக-வே போதும் என நினைத்தால்'' - TTV தினகரன் பளீச்

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த என்.டி.ஏ கூட்டணியில் நடைபெறும் சம்பவங்கள் பேசுபொருளாக உள்ளன.முதலில், கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறினார். அதையடுத்து, அ.தி.மு.க-வில... மேலும் பார்க்க

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' - செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்று ச... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க