Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பாராட்டு விழா... முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு!
`இசைத் திருவிழா’ இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேசுகிறார்கள்.
இது தமிழ் திரையுலகமே திரளும் திருவிழா. தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இசைத்து விருந்து வைக்க இருக்கிறார், இளையராஜா.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வந்த பிறகு ராஜா விழாவுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக நடத்தத் திடமிட்டு உள்ளனர்.
தமிழக அரசே நடத்தும் நிகழ்ச்சி என்பதால் வெளிநாட்டில், வெளியூரில் நாடக்கும் அனைத்து சினிமா படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளச் சொல்லி அரசு, சினிமா சார்ந்த அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கபட இருக்கிறதாம்.

பிரபல ஹீரோக்கள் எல்லோரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ள நிலையில், அஜித், விஜய் கலந்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு சினிமா உலகை தாண்டி, தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...