Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு
டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் என 104 பேரை அமெரிக்க ராணுவம் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/bz45hkse/steptodown.com496306.jpg)
அதேசமயம், இந்த நடவடிக்கை எதோ ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நடக்கும் விஷயம் அல்ல. கடந்த பைடன் ஆட்சி, அதற்கு முந்தைய ட்ரம்ப் ஆட்சி அதற்கும் முந்தைய அதிபர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து இந்த நடவடிக்கையை அமெரிக்க மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 15,756 இந்தியர்களை அமெரிக்கா திருப்பியனுப்பியிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
ராஜ்ய சபாவில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட தரவுகளின்படி,
2009: 734
2010: 799
2011: 597
2012: 530
2013: 515
2014: 591
2015: 708
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/wf2hgz91/Screenshot-2025-02-06-145033.png)
2016: 1,303
2017: 1,024
2018: 1,180
2019: 2,042
2020: 1,889
2021: 805
2022: 862
2023: 617
2024: 1,368
2025 (பிப்ரவரி 5-ம் தேதி வரை): 104
என 2009 முதல் மொத்தம் 15,756 இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக திருப்பியனுப்பப்பட்டிருக்கின்றனர். மேலும், இறுதி வெளியேற்ற உத்தரவுடன் 487 இந்தியர்கள் இருக்கின்றனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று தெரிவித்திருக்கிறார்.