பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
India - Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' - விளக்கம் சசி தரூர்
பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. 'போர் வேண்டாம்... பதற்ற நிலை வேண்டாம்' என்று சொல்வதோடு மட்டும் நின்றுகொண்டது.
'ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கவில்லை?' என்பதை விளக்குகிறார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.
"ஆச்சரியமாக, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை சீனா எடுக்கவில்லை. இந்தப் போர் குறித்த சீனாவின் அறிக்கைகள், 'இந்தியா - சீனா உறவு மேம்பட்டு வருவதை சீனா உணர்ந்திருக்கிறது' என்பதை காட்டுகின்றன.

சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக அளவிலான வரி விதித்துள்ளார். அதனால், சீனாவுக்கு இந்திய சந்தை மிகவும் முக்கியம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சந்தையின் தேவை தற்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.
முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நின்றிருக்கும். ஆனால், இப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாக உள்ள போரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என்பது என்னுடைய கருத்து" என்று பேசியுள்ளார்.