செய்திகள் :

Iran vs America: ஈரானைத் தாக்க இந்திய வான்வழியை பயன்படுத்தியதா அமெரிக்கா? | Fact Check

post image

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைத் தாக்க அமெரிக்க ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரில் இந்தியாவின் வான் பரப்புப் பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், அது பொய் என PIB -யின் உண்மை சரிபார்ப்பு மையம் கூறியுள்ளது.

"அமெரிக்காவின் மிட் நைட் ஹேமர் ஆபரேஷனுக்கு இந்திய வான் பரப்பு பயன்படுத்தப்படவில்லை" எனத் தெரிவுபடுத்தியுள்ளது.

இதற்காக அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னின் செய்தியாளர் சந்திப்பை மேற்கோள்காட்டியுள்ளனர்.

அவர், "ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது ஈரானைத் தாக்க இந்திய வான் வழி பயன்படுத்தப்பட்டதாக சில சமூக ஊடகக் கணக்குகள் கூறுகின்றன. இது பொய்யான செய்தி. இந்திய வான்வழியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை." எனக் கூறியதாக PIB தெரிவித்துள்ளது.

மேலும் ஜெனரல் கெய்ன் ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வழித்தடங்கள் பயன்படுத்தப்பட்ட என்பதை பெண்டகனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார். அதில் எந்த அமெரிக்க போர் விமானமும் இந்திய பரப்பைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காணலாம்.

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளத... மேலும் பார்க்க

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.பல மாணவர்கள் நீட் தேர்வால் தற... மேலும் பார்க்க

IndiGO: "பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ..." - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். 35 வயதாகும் அந்த விமானியை, "நீ வானில் பறக்கத் தக... மேலும் பார்க்க

"ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது பாஜக அல்ல... இந்தியா கூட்டணி!" - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்... மேலும் பார்க்க

"முருகன் மாநாடு வீடியோவை வன்மையாகக் கண்டிக்கிறோம்; போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?" - அதிமுக

மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க-விடம் பண்ணையடிமையாகிவிட்ட அ.தி.மு.க இதை ரசிப்பத... மேலும் பார்க்க