தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்! - பின்னணி என்ன?
ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்களுக்கு என்று மிகப்பெரிய சிறை ஒன்று உள்ளது. அந்த சிறையில் சுமார் 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள அங்குள்ள பெண் கைதிகளிடம் விசாரிக்கப்பட்டிருக்கிறது. அப்போது சிறையில் இருக்கும் அவர்கள் கூறியதாவது, “நாங்கள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைமையில் வாழ முடியவில்லை.
குறிப்பாக, பிள்ளைகளால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறோம். உணவும் கிடைப்பதில்லை. உடல் நலத்திலும் அக்கறை கொள்வதில்லை. இதன்காரணமாகவே ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டு சிறைக்கு வந்துவிடுகிறோம். இங்கு எங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு அரசாங்கத் தரவுகளின்படி, ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில், 20.53 மில்லியன் பெண்களும், 15.72 மில்லியன் ஆண்களும் உள்ளனர். ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3 சதவீதமாக உள்ளது. இது, கடந்தகாலங்களைவிட உயர்வாகும்” என்பது குறிப்பிடத்தக்கது.