BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
Karnataka: பைக் வாங்கப் பணம் கேட்டு டார்ச்சர்; கணவனைக் கொன்று உடலை மறைத்த மனைவி; நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் பெலகாவியில், தன்னைத் துன்புறுத்திய கணவரைக் கொன்று, உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி கிணற்றில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீஸாரின் கூற்றுப்படி, டிசம்பர் 10 ஆம் தேதியன்று சிக்கோடி தாலுக்காவின் உமாராணி கிராமத்தில் ஸ்ரீமந்தா இட்னாலி (40) என்பவரின் உடல் இரண்டு துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் டிசம்பர் 8 ஆம் தேதி இரவு, இக்கொலை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைக் குறித்துப் பேசிய, பெலகாவி காவல்துறை கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேட், "ஸ்ரீமந்தா இட்னாலி தனது மனைவியைக் குடிபோதையில் துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு நிலத்தை விற்றுத் தருமாறு மனைவியை அவர் துன்புறுத்தியிருக்கிறார்.
இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படவே, டிசம்பர் 8 ஆம் தேதி இரவு வெளியில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீமந்தா இட்னாலியின் கழுத்தை சாவித்ரி நெரித்ததில் அவர் சுயநினைவை இழந்தார். அதையடுத்து, அருகிலிருந்த ஒரு பாறாங்கல்லால் அவரின் முகத்தைச் சிதைத்தார். பின்னர், அவர் உயிரிழந்ததும் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி பீப்பாய்களில் அடைத்து கிணற்றுக்குள் வீசினார். மேலும், அந்தப் பாறாங்கல்லையும் அதே கிணற்றில் வீசினார்.
முதலில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கிராமத்தில் முகாமிட்டு வழக்கை விசாரித்தது. விசாரணையில், இந்தக் கொலையில் தனக்குச் சம்பந்தமில்லை என சாவித்ரி கூறிவந்தார். பின்னர், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது, போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...