KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா
`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.
தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார்.

தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இப்படம் நாளை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று(செப்டம்பர் 3) திரையிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த தொலைக்காட்சி தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், "ரொம்ப நாள் கழித்து நிறையச் சிரித்தேன்.
அதன் பிறகு கடைசி 5 நிமிடம் படத்தைப் பார்த்து அழுதேன். எதற்கு அழுதேன் என்று தெரியவில்லை.
இந்தப் படத்திலிருந்த கதாபாத்திரங்களை எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு.
எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் முதல் படமே பாலாவிற்கு இப்படி அமைந்ததுதான்.

தொடர்ந்து இந்தப் படத்தில் சிரிக்க வைத்தார்கள். கடையில் யோசிக்கவும் வைத்தார்கள்.
காந்தி கண்ணாடி நிறைய விஷயங்களை, நிறையப் பேருக்குச் சொல்லித் தரும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகாக இருக்கிறது. பாலா நன்றாக நடித்திருக்கிறார்.
இந்த வாராம் ரிலீஸ் ஆகும் எல்லா படத்தையும் பாருங்கள். ஆனால் இந்தப் படத்தை எனக்காவும், என் தம்பிக்காகவும் பாருங்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...