செய்திகள் :

Manmohan Singh: கரடு முரடான பாதையை சீராக்கி, தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் மன்மோகன் சிங்

post image

ஜூன், 1991.

இந்தியாவின் கஜானாவில் வெறும் 1 பில்லியன் டாலருக்கும் கீழே தான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அது என்ன வெறும் 1 பில்லியன் டாலர் என்று நினைக்காதீர்கள். கடந்த நவம்பர் மாத தரவுகளின் படி, நமது நாட்டின் தற்போதைய அந்நிய செலவாணி கையிருப்பு மதிப்பு 657.89 பில்லியன் டாலர்.

அன்றைய பொருளாதார சூழலும், இன்றைய பொருளாதார சூழலும் வேறு தான். ஆனால், அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, 1 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது நிச்சயம் மிகவும் குறைவு தான். ஒரு நாட்டின் வணிகம் மற்றும் வளர்ச்சியில் அந்நிய செலவாணிக்கும் முக்கிய பங்கு உண்டு.

டாப் 5 நாடுகள்!

டாப் 5 நாடுகள்!

ஆக, அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தான் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த மன்மோகன் சிங், 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய நிதியமைச்சராக பதவி ஏற்றார். அவரை சிறந்த நிதியமைச்சர், ஆக்சிடென்டல் பிரதமர் என்று எப்படி குறிப்பிட்டாலும், அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்த தருணம் என்பது மிக முக்கியமான தருணம் ஆகும்.

இந்தியா தற்போது, உலக அளவிலான டாப் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

நிதிப் பற்றாக்குறை, கடன்

அவர் நிதியமைச்சராக பதவியேற்ற தருணத்தில் அவரது பாதை அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை, அது ஒரு கரடு முரடான பாதை. அப்போதைய இந்தியாவின் நிலையை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்...

இந்தியாவிற்கு வரும் வருமானத்தை விட, செலவுகள் எக்கசக்காமாக இருந்தது. 1980-81-ம் ஆண்டு 9 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் அளவிலாக இருந்த நாட்டின் நிதி பற்றாக்குறை 1990-91 ஆண்டு காலக்கட்டத்தில் 12.7 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.

35 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் அளவிலாக இருந்த இந்திய நாட்டின் உள்நாட்டு கடனின் அளவு, 1990-91-ம் ஆண்டு 53 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் அளவிலாக வளர்ந்திருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகமாக இருந்ததால், நிதி பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இலங்கையின் நிலை...

இலங்கையின் நிலை...

அப்போது வளைகுடா நாடுகளில் நடந்துகொண்டிருந்த சண்டையால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறியிருந்தது. இது இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மேலும் சுமையை சேர்த்தது.

மேலே குறிப்பிடப்பட்டிருந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால், இந்தியாவால் உலக நாடுகளுடன் வணிகம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும், இந்தியாவினால் ஏற்கெனவே வாங்கியிருந்த கடனைக் கட்ட முடியாத சூழல் கூட ஏற்பட வாய்ப்பிருந்தது. இதை இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு சொல்ல வேண்டுமானால், 2022-ம் ஆண்டு இலங்கை தங்களது கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த நிலை. ஆனால், இந்தியாவின் நிலை அந்த அளவுக்கு மோசமாக ஆகிவிடவில்லை.

சீர்திருத்தம்

இந்தியாவின் பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவின் பக்கம் இருந்து வேறு நாடுகளுக்கு திருப்பினர். இதுவும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பணவீக்கம் உயர்வும் கொஞ்சம் நஞ்சமாக அல்ல.

இத்தகைய நெருக்கடியான சூழலில் தான் மன்மோகன் சிங் பதவியேற்றார். அவர் பதவியேற்ற உடனே, தொழில், வணிகம், பொதுத்துறை, நிதி திருத்தம் ஆகிய நான்கு துறைகளில் மிக முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இந்தியா பொருளாதாரத்தை மேம்படுத்த லைசன்ஸ், ஏற்றுமதி சலுகைகள் போன்ற இந்தியாவின் வருமானத்திற்கு தடையாக இருக்கும் பல விஷயங்களை நீக்கினார்.

LPG சீர்திருத்தம்

LPG சீர்திருத்தம்

LPG (Liberalisation, Privatization, Globalisation) சீர்திருத்தம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாகும். அந்த மைல்கல்லை அறிமுகப்படுத்தியதே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான்.

அதுவரை கடுமையான சட்டத்திட்டங்களை உள்ளடக்கியிருந்த இந்திய சட்டம், இந்த சீர்திருத்ததால் மாற்றப்பட்டது. பல நன்மைகளும் வளர்ந்தது. இன்று உலக அளவில் இந்தியா கொடிக்கட்டி பறக்கிறது. உலக அளவில் இந்தியர்கள் வணிகம் செய்வது போன்றவற்றிற்கு மன்மோகன் சிங் கொண்டு வந்த எல்.பி.ஜி திட்டம் தான் அடித்தளம்.

அது சரியானதா?

கடுமையான சட்டத்திட்டங்களை தளர்வுபடுத்தினார் என்கிறப்போது, 'அது சரியானதா?' என்ற கேள்வி எழலாம். மேம்போக்காக்க பார்க்கும்போது, இந்தக் கேள்வி சரியானது தான். ஆனால், ஊன்றி பார்க்கும்போது, மன்மோகன் சிங் கொண்டு வந்த தளர்வுகள் சரியானது. காரணம், அப்போதைய கடும் சட்ட திட்டங்களால் உற்பத்தி திறன் மிகவும் குறைவாக இருந்தது. அதிக வரிகள் விதிக்கப்பட்டன; இந்த சட்டத்திட்டங்கள் மூலம் தான் செயல்பட வேண்டும் என்ற நிலையில் பெரிய நிறுவனங்களால் மட்டும் தான் வளர முடிந்தது. இந்தச் சட்டத்திட்டங்களுடம் சிறிய நிறுவனங்களால் வளர முடியவில்லை. மேலும், கடும் சட்ட திட்டங்களுக்கு மத்தியில் நிறுவனங்களை ஓட்ட, வளர்க்க லஞ்சம் மற்றும் ஊழல்கள் மலிந்து போய் கிடந்தன. இத்தனைகளுக்கும் மன்மோகன் சிங் தனது திட்டங்கள் மூலம் செக் வைத்தார்.

வெற்றிநடை

வெற்றிநடை

அவர் கொண்டு வந்த ஒவ்வொரு சீர்த்திருத்தங்களின் மூலம், எளிதாக யார் வேண்டுமானாலும் தொழில்துறையில் காலடி எடுத்து வைக்க முடிந்தது. சட்டதிட்ட தளர்வுகளால் வரிகள் குறைந்தது. ஏற்றுமதிகள் எளிமையானது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல செல்ல, இந்திய பொருளாதாரமும் வெற்றிநடை போடத் தொடங்கியது.

ஆக, இன்றைய செழுமையான இந்திய பொருளாதார நிலைக்கு அடிக்கோலிட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு ராயல் சல்யூட்!

`பாதுகாப்பு இல்லை; மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் ஆதரவு’ - டிஜிபிக்கு ராஜினாமா கடிதம் எழுதிய காவலர்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் ஒருவர் தன்னை காவல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு எழுதிய ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருக... மேலும் பார்க்க

Manmohan Singh : `வரலாறு உங்களிடம் மிகக் கனிவாக இருக்கும்' - சென்று வாருங்கள் மன்மோகன் சிங்

நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிமன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில... மேலும் பார்க்க

Manmohan Singh: 6 வழிகளில் மீட்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் - மன்மோகன் சிங்கின் `1991’ ஃப்ளாஷ்பேக்

மன்மோகன் சிங்இந்திய பொருளாதாரத்தின் சிற்பிஇந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும், இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான டாக்டர் மன்மோகன் சிங் தனது 92-வது வயதில் நேற்று காலமானார். மென... மேலும் பார்க்க

`ஞானசேகரன் மீது 20 வழக்குகள்; FIR லீக் ஆனது எப்படி?' - அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கமிஷனர் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின்... மேலும் பார்க்க

`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட மாணவியால் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க