செய்திகள் :

Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்.. காரணம் என்ன?

post image

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வரவேற்க அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது மண்டியிட்டு வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 16) அன்று அல்பேனியாவின் டிரானாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட உலக அரசியல் தலைவர்களை அல்பேனிய பிரதமர் எடி ராமா புன்னகையுடன் வரவேற்றார்.

இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்
இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

இந்த கூட்டத்தின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக அல்பேனிய பிரதமர் எடி ராமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஐரோப்பா முழுவதும் இன்று வந்துள்ள இடத்திலிருந்தும், உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்தும், நான் உங்களுக்கு வணக்கம் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி இத்தாலிய பிரதமர் மெலோனி வந்ததும், எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது தரையில் மண்டியிட்டு வரவேற்றார். அவர் அடிக்கடி தனது இத்தாலிய தோழிக்காக வரவேற்பு செய்வது போலவே, இத்தாலிய பிரதமரை வரவேற்றார். சிவப்பு கம்பளத்தின் மீது ஒரு முழங்காலில் மண்டியிட்டு மரியாதைக்குரிய வணக்கத்தை வழங்கினார். பிறகு அவரை அரவணைத்து கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்து பிரச்சாரம் செய்து இருந்தார் எடி ராமா. அதன் அடிப்படையில் அவர் மீண்டும் நான்காவது முறையாகப் அல்பேனியா பிரதமராக பதவி ஏற்றார். தனது மகத்தான மறுதேர்தல் வெற்றியில் மகிழ்ச்சியடைந்து, தொகுதி மற்றும் அதற்கு அப்பால் உள்ள நண்பர்களை வரவேற்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த உயர்மட்ட உச்சிமாநாடு அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதை வெளிப்படுத்த ஒரு சரியான மேடையாக அமைந்தது. இதனை அவர் பயன்படுத்திக் கொண்டு உள்ளார்.

இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்
இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த எடி ராமா, “ நான் அவர்களில் மிக உயரமானவன் என்பது உண்மைதான், ஆனால் நான் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான ஒரு நாட்டை வழி நடத்துகிறேன். மேலும் இந்த உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருப்பது எங்களுக்கு பெரிய மரியாதையை கொடுத்து இருக்கிறது" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' - அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

``எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' - கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?' என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. ஆன... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா' நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்ற... மேலும் பார்க்க

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின்... மேலும் பார்க்க