செய்திகள் :

Microbiota Vault: பேராபத்தைத் தடுக்க மனித மலத்தை சேமிக்கும் விஞ்ஞானிகள்! - காரணம் என்ன?

post image

மனித மலம், புளித்த உணவுகள் போன்றவற்றை சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பல்கலைக் கழகம் சேமித்து வருகிறது. இந்த சேமிப்புக்குப் பின்னணியில் பெரும் திட்டமும், தேவையும் இருப்பதாக விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மைக்ரோபயோட்டா வால்ட் (Microbiota Vault) என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மனித மலத்தையும், புளித்த உணவுகளையும் -80 டிகிரி செல்சியஸுக்கு கீழ் உறைய வைக்கின்றனர். அதன் மூலம் மனித செயல்பாடு காரணமாக ஆபத்தான விகிதத்தில் மறைந்து வரும் அத்தியாவசிய குடல் நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுகிறது.

நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகள்

எப்போது தொடங்கப்பட்டது?

2018-ல் தொடங்கப்பட்ட மைக்ரோபயோட்டா வால்ட் திட்டத்தில், பெனின், பிரேசில், எத்தியோப்பியா, கானா, லாவோஸ், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து 1,204 மல மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இயற்கையாக நிகழும் புரோபயாடிக்குகள் நிறைந்த 190 புளித்த உணவு மாதிரிகளும் உறையவைக்கப்பட்டிருக்கிறது. திட்டத்தின் அடுத்த கட்டத்தில் மண், நீர், விலங்குகளிலிருந்து சுற்றுச்சூழல் நுண்ணுயிரிகளைச் சேர்க்கத் திட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் பலன் என்ன?

எதிர்கால சந்ததியினருக்காக நுண்ணுயிர் பன்முகத்தன்மை இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, நுண்ணுயிரிகள் - பாக்டீரியா, பூஞ்சை, ஆர்க்கியா போன்ற சிறிய உயிரினங்கள் மனித ஆரோக்கியம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானவை.

ஆனால் நுண்ணுயிர்களை அழிக்கும் படியான மனித செயல்பாடுகள், தொழில்துறை, விவசாயம், காலநிலை மாற்றம் போன்ற நவீன நடைமுறைகள் இந்த நுண்ணுயிரிகளை முற்றிலுமாக சிதைந்து போகச் செய்கின்றன.

நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகள்

அதே நேரம், நமது நோய் எதிர்ப்பு மண்டலங்களைப் செயல்படுத்த மனிதன் பல்வேறு நுண்ணுயிரி தொற்றுகளுக்கு ஆளாக வேண்டியது அவசியம். ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிரி தாக்கினால், நோய்கள், ஒவ்வாமை, நாள்பட்ட அழற்சியிலிருந்து அதுவே பாதுகாக்க உதவும். குடல் பாக்டீரியா உணவை உடைப்பதிலும் வைட்டமின்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மையத்தின் இயக்குநரும், நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் திட்டத்தின் இணை ஆசிரியருமான டாக்டர் மார்ட்டின் பிளேசரின், ``மனித செயல்பாடுகள் நமது நுண்ணுயிரியலைக் குறைத்து வருகின்றன, அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகளை நாம் இப்போது பாதுகாக்காவிட்டால், அது மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகும்" என எச்சரிக்கிறார். அதனால்தான் இந்த திட்டம் நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் பேராபத்தைத் தடுக்கும் `உயிரியல் பாதுகாப்பு' எனக் கருதப்படுகிறது.

நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகள்

எதிர்காலத் திட்டம்:

இந்தத் திட்டத்தின் மூலம், 2029-ம் ஆண்டுக்குள் 10,000 மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிர் காப்பகம் மருத்துவ சிகிச்சைகள், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு, விவசாய மீள்தன்மை போன்ற எதிர்கால முயற்சிகளுக்கு முக்கியமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மலத்தை உறைய வைத்து பேரழிவைத் தடுக்க முடியுமா?

இந்த விவகாரம் விசித்திரமாகத் தோன்றினாலும், மனித மலத்தையும், அவற்றில் உள்ள முக்கிய நுண்ணுயிரிகளையும் உறைய வைப்பது விதைகள், டிஎன்ஏ, தரவு காப்பகங்களைச் சேமிப்பது போன்ற எதிர்கால-தடுப்பு உத்தியாக இருக்கலாம். இது பரிணாமம் நமக்குக் கொடுத்த உயிரியல் கருவிகளைப் பாதுகாப்பது பற்றியது. ஒரு நூற்றாண்டு காலத்தில், நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மேலும் சரிந்து, இன்றைய சிகிச்சைகள் தோல்வியடைந்தால், இன்று சேமிக்கப்பட்டுள்ள உறைந்த குடல் நுண்ணுயிரிகள் மீளுருவாக்கத்தையும், மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தையும் வழங்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - என்ன சொல்கிறார்?

'புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்' என்ற வாசகத்தை உயிர்பிக்கும் சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர் அபினவ் மயிலவரபு ஹைதராபாத்தில் வீட்டுக்குச் செல்ல... மேலும் பார்க்க

``முடி மாற்று சிகிச்சைக்கு பின் உடலுறவு கூடாது'' - மருத்துவ விதிமுறையை மீறிய இளைஞர் சோகம்..

வேல்ஸைச் சேர்ந்த இளைஞர் ரூபன் ஓவன், துருக்கியில் உள்ள கிளினிக்கிற்கு மாடலிங் செய்ய சென்றுள்ளார். அங்கு `இலவசமாக முடி மாற்று அறுவை சிகிச்சை' செய்வதாக கூறியதால் சம்மதித்து அவரது தலையை கொடுத்துள்ளார். அற... மேலும் பார்க்க

``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் ஆஷிக் பனாயா ஆப்னே உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்க... மேலும் பார்க்க

Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! - எத்தனையாவது இடம்?

Safety Index (பாதுகாப்பு குறியீடு) என்பது ஒரு இடத்தின் பாதுகாப்பு நிலையை அளவிடும் ஒரு கணக்கீட்டு மதிப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், நாடு அல்லது பகுதியின் குற்றச் செயல்கள், காவல்துறை செயல்பாடு, மக்களி... மேலும் பார்க்க

``ஆட்டோ டிரைவர்தான் என்னிடம் முதலில்..." - வைரலான வீடியோ குறித்து சினேகா மோகன்தாஸ் விளக்கம்

நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32). ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருக்கும் இவ... மேலும் பார்க்க

`விமான அவசரம்' - பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தி... மேலும் பார்க்க