செய்திகள் :

Mumbai Indians : 'திலக் வர்மா - ரிட்டையர் அவுட்' - மும்பையின் மிக மோசமான முடிவு! ஏன் தெரியுமா?

post image

'ரிட்டையர் அவுட் முடிவு!'

லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஏழே பந்துகள் மீதமிருந்த சமயத்தில் திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக வைத்திருந்தது மும்பை இந்தியன்ஸ். அவருக்கு பதிலாக சான்ட்னரை உள்ளே அழைத்து வந்தும் மும்பை அணி தோற்றிருக்கவே செய்கிறது. எனில், மும்பை அணி திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக சொன்னது சரியான முடிவுதானா?

திலக் வர்மா
திலக் வர்மா

'ஹர்திக் விளக்கம்!'

திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் செய்ததன் பின்னால் இருந்த காரணத்தைப் பற்றி மும்பை அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இருவருமே பேசியிருக்கின்றனர்.

Hardik Pandya
Hardik Pandya

'திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக சொன்ன சமயத்தில் எங்களுக்கு அதிரடியான சில ஷாட்கள் தேவைப்பட்டது. அவரால் அதை ஆட முடியவில்லை. அவர் முயன்று பார்த்தும் முடியவில்லை. கிரிக்கெட்டில் சில நாட்கள் இப்படித்தான் அமையும். அதனால்தான் அவரை ரிட்டையர் அவுட் ஆக்கினோம்.' என ஹர்திக் பாண்ட்யா போட்டிக்குப் பிறகு தோல்வி பற்றி பேசுகையில் கூறியிருந்தார்.

'ஜெயவர்த்தனே விளக்கம்!'

போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்கு மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே வந்திருந்தார். அவரிடம் முதல் கேள்வியாகவே திலக் வர்மாவை பற்றிதான் பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தனர். அதற்கு அவர், 'திலக் வர்மா நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். சூர்யாவுடனான அவரின் பார்ட்னஷிப் முறிந்த பிறகு அவரால் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. அவர் முயன்று பார்த்தும் முடியவில்லை. அவர் க்ரீஸில் போதுமான நேரத்தை செலவிட்டிருந்தார்.

ஜெயவர்த்தனே
ஜெயவர்த்தனே

அப்படியிருக்க அவர் பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். ஆனால், அவரால் முடியவில்லை. எங்களுக்கு அந்த இடத்தில் துடிப்பாக பெரிய ஷாட்களை ஆட கூடிய பேட்டர் தேவைப்பட்டார். அதனால்தான் சான்ட்னரை இறக்கினோம். அதை அவ்வளவு சிறப்பான முடிவென சொல்லமாட்டேன். ஆனால், அது சூழல் கருதி எடுக்கப்பட்ட முடிவு.' என்றார்.

'ரிட்டையர் அவுட் விதிமுறை!'

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜெயவர்த்தனே பேசியதிலிருந்து நம்மால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அதாவது, திலக்கால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியவில்லை. இதனால் கடைசி ஓவரில் அவருக்கு ஸ்ட்ரைக் கிடைக்கும்பட்சத்தில் அவரால் பெரிய ஷாட்டை ஆட முடியாது என்று நினைத்துதான் மும்பை அணி அந்த முடிவை எடுத்திருக்கிறது. ரிட்டையர் அவுட் என்பது ஒரு விதிமுறை. ஒரு பேட்டரை ஒரு அணி விருப்பப்பட்ட நேரத்தில் ரிட்டையர் அவுட் ஆக சொல்லி இன்னொரு பேட்டரை க்ரீஸூக்குள் அனுப்ப முடியும். வெளியே சென்ற பேட்டரால் மீண்டும் க்ரீஸூக்குள் வந்து ஆட முடியாது.

Hardik Pandya
Hardik Pandya

இதுதான் விதிமுறை. அதற்கு உட்பட்டுதான் இதை செய்திருக்கிறார்கள். அதனால் அதில் பெரிய பிரச்\னை இல்லை. நாம் அதிகமாக ரிட்டையர் அவுட் விஷயங்களை பார்க்காததால் நமக்கு அது பெரிதாக தெரிகிறது. ஆனால், நவீன டி20 சூழலில் வெகு விரைவிலேயே இந்த ரிட்டையர் அவுட் முறை இயல்பாகக்கூடும்.

'மும்பை செய்தது சரியா?'

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று செய்தது தவறான விஷயம்தான். அதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று 7 பந்துகள் மீதமிருக்கையில்தான் ரிட்டையர் அவுட்டை கொண்டு வந்தார்கள். அப்போது ஹர்திக் க்ரீஸில் இருக்கிறார். அவர்தான் மும்பை அணியின் ஃபினிஷர். ஆக, கடைசி ஓவரில் 6 பந்துகளிலும் அவர்தான் ஸ்ட்ரைக்கில் இருக்க வேண்டும் என நினைப்பார். ஹர்திக்குக்கு ஸ்ட்ரைக் கிடைக்க செய்வதுதான் நான் ஸ்ட்ரைக்கரின் வேலை. இதற்கு எதற்கு திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் செய்ய வேண்டும்? அவரே ஹர்திக்குக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்திருப்பாரே?

இன்னொரு விஷயம், நீங்கள் திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக்கிவிட்டு யாரை உள்ளே அழைத்து வருகிறீர்கள் என்பதும் முக்கியம். பெவிலியனில் ஒரு பொல்லார்ட் இருக்கிறார். அவர் இந்த சமயத்தில் வந்தால் சரியாக இருக்குமென திலக்கை வெளியே வர சொல்கிறீர்கள் என்றால் அது சரியான முடிவு. அதை யாரும் குறை சொல்லவே முடியாது. ஆனால், இங்கே திலக் வர்மாவை வெளியேற்றிவிட்டு சான்ட்னரை உள்ளே அழைத்து வருகிறீர்கள்.

சான்ட்னர் ஒரு ஆல்ரவுண்டர். கொஞ்சம் அதிரடியாக ஆடுவார். கடைசிப் பந்தில் சிக்சர் தேவை எனும் நிலையில் சென்னைக்காக ஒரு போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த நியாபகம் இருக்கிறது. ஆனாலும் சான்ட்னர் முழுக்க முழுக்க ஒரு ஃபினிஷரெல்லாம் இல்லை. சிக்கினால் அடிப்பார், அவ்வளவுதான். இப்படி எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு வீரருக்காக திலக் வர்மாவை வெளியேற்ற வேண்டுமா?

உள்ளே சென்ற சான்ட்னர் இரண்டே பந்துகளைத்தான் பிடித்திருந்தார். இரண்டு ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார்.

இந்த ரிட்டையர் முடிவை 19 வது ஓவருக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சான்ட்னர் கூடுதலாக ஒன்றிரண்டு பந்துகளை ஆடியிருப்பார். பெரிய ஷாட்டை ஆடியிருக்கும் வாய்ப்பும் உண்டு. அது அணிக்கு வெற்றியை கூட தேடி கொடுத்திருக்கலாம். ஆக, சரியான சமயத்தில் ரிட்டையர் அவுட் முறையை எடுக்காமல் சொதப்பியிருக்கிறார்கள்.

இல்லையேல் திலக் வர்மாவை முழுமையாக நம்பியிருக்க வேண்டும். திலக் வர்மா மும்பையால் வளர்க்கப்பட்ட வீரர். மெகா ஏலத்துக்கு முன்பு ரீட்டெயின் செய்யப்பட்ட வீரர். அவர் மீது நம்பிக்கை வைத்து போட்டியை தோற்றிருந்தாலும் அணி நம்மோடு இருக்கிறது என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கும். இப்போது அதையும் உடைத்துவிட்டார்கள். அடுத்தப் போட்டியில் அவர் உள்ளூற ஓர் அழுத்தத்தோடுதான் களமிறங்குவார்.

Tilak Varma
Tilak Varma

அணிக்கும் பலனில்லாமல், தனிப்பட்ட வீரர் ஒருவரின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்தான் இது ஒரு மிக மோசமான முடிவு.!

CSK vs DC : 'தோனிக்கென்ன தோனி இன்னும் நல்லாதான ஆடுறாரு!' - சப்போர்ட் செய்யும் ஃப்ளெம்மிங்

'சென்னை அணி தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்த... மேலும் பார்க்க

Dhoni : 'சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோனியின் பெற்றோர்!' - முக்கிய முடிவை அறிவிக்கிறாரா தோனி?

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை Vs டெல்லி போட்டியை காண தோனியின் பெற்றோர் ராஞ்சியிலிருந்து வந்திருக்கின்றனர். தோனியின் கரியரில் அவருடைய பெற்றோர் பெரிதாக எந்தப் போட்டியையும் நேரில் கண்டதே இல்லை. இந்நில... மேலும் பார்க்க

CSK vs DC: "நான் குணமாகிட்டேன்..." - கேப்டன் ருத்துராஜ் கொடுத்த ட்விஸ்ட்; கான்வே ரிட்டர்ன்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜூக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்குப் பதில் தோனி... மேலும் பார்க்க

Devon Conway : 'கண்டா வரச் சொல்லுங்க!' - கான்வே ஏன் CSK க்கு முக்கியம் தெரியுமா?

'கண்டா வரச் சொல்லுங்க!'சென்னை அணி ஆடியிருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றிருக்கிறது. இன்று டெல்லிக்கு எதிராக மோதுகிறது. டெவான் கான்வேயை ஏன் லெவனில் எடுக்காமல் விடுகிறீர்கள் என்பதே சென்னை ரசிகர... மேலும் பார்க்க