சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்...
Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
டோலிவுட்டின் 'ஹிட்' பிரான்சைஸிலிருந்து மூன்றாவது படமாக 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) படம் உருவாகியிருக்கிறது. நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் நானி தயாரித்திருந்த 'கோர்ட்' திரைப்படம் கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'ஹிட் 3' படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்திருந்த நானியைச் சந்தித்துப் பேசினோம்.

நானி பேசுகையில், "இந்தப் படத்தைத் தொடங்கும்போது இத்தனை பாகங்களாக எடுப்போம் என எந்தத் திட்டமும் இல்லை.
ஒரே திரைப்படம் என்ற எண்ணம் மட்டும்தான் எங்களிடம் இருந்தது. த்ரில்லர் கதை எப்போதும் திரையரங்கத்தில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
நான் என்னுடைய கரியரில் இவ்வளவு சீக்கிரமாக 'A' படத்தில் நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை.
நான் என்னுடைய கரியரில் அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
ஒரே ஜானரை மட்டுமே தேர்ந்தெடுத்து என்னுடைய ஜானரைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.
அனைத்து வகையான திரைப்படங்களும் என்னுடைய கரியரில் இருக்க வேண்டும். சமீபத்தில் நான் தயாரித்திருந்த 'கோர்ட்' திரைப்படத்தின் வெற்றி எனக்கு முழுதிருப்தியைக் கொடுத்தது.
அத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மக்கள் ஒரு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனத்தைக் கொடுக்கும்போது ஒரு வகையான எண்ணத்தைக் கொடுக்கும்.
ஆனால், இத்திரைப்படத்திற்கு பலரும் எனக்கு நன்றி தெரிவித்தார்கள். இது அளவிட முடியாத உணர்வு.

இதேபோல் அடுத்தடுத்து படங்கள் கொடுக்க வேண்டும் என உத்வேகத்தையும் கொடுக்கிறது," என்றவர், "மணி சாரும் கமல் சாரும் 'நாயகன்' படத்திற்குப் பிறகு இப்போது 'தக் லைஃப்' படத்தைச் செய்திருக்கிறார்கள்.
மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன். ஒருவேளை 'தக் லைஃப்' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகியிருந்தால், அத்திரைப்படத்திற்கு முதலில் சென்று விட்டுத்தான் என்னுடைய படத்திற்குச் சென்றிருப்பேன்.
'ஓகே கண்மணி' படத்தின் துல்கர் சல்மாந் கதாபாத்திரத்திற்கு நான் தெலுங்கில் டப் செய்திருந்தேன். அதுபோல், மணி சார் எனக்கு ஒரு கதையும் சொல்லியிருக்கிறார். ஆனால், அப்போது அது நடக்கவில்லை.
இந்த தசாப்தத்தில் நான் பார்த்த சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று 'மெய்யழகன்'. பிரேம் அற்புதமாக அப்படத்தை எடுத்திருந்தார். அப்படத்தைப் பார்த்துவிட்டு கார்த்தி சாரிடமும் நான் பேசியிருந்தேன்," எனக் கூறி முடித்துக் கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.