செய்திகள் :

NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது - என்ன காரணம்?

post image

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு முக்கிய காரணமாக மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் தொடர்ந்து கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

இந்த கொலை வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டு 10 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு உள்ளிட்ட சுமார் 10-க்கு மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பூம்பாறை பகுதிகளில் மட்டும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

கைது செய்யபட்ட நபர்

கொடைக்கானல் நகர் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை நடத்தி வரும் இன்பதுல்லா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன், எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள், வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்து... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க