மசோதாவை நிறுத்திவைத்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு எப்படி இருக்கும்? - உச்சநீதி...
NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதாக காரணம் சொல்லப்பட்டது.
இந்த கொலை வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு இதில் தொடர்புடையவர்களாக 18 பேரரை விசாரணை செய்து அதில்10 நபர்கள் கைதான நிலையில் 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கி இருந்த முகமது அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
இன்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ஜின்னா நகரில் வசித்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா என்பவரது இல்லத்தில் காலை 6 மணி முதல் 3 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் யூசிப் என்பவரது இல்லத்திலும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லம் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.