Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் கேள்வி
சென்னையில் இன்று (மே 24) சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதோ தேர்தல் பணிகளைத் தொடங்கி செய்து வருகிறது.
கிட்டத்தட்ட 100 வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம். ஜூன் இறுதிக்குள் எல்லா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்து, அடுத்தக்கட்ட பணிகளை செய்வோம்.
நிச்சயமாக 234 தொகுதிகளில் 134 பேர் இளைஞர்களாகவே இருப்பார்கள்” என்று உறுதியளித்திருக்கிறார்.

தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது குறித்து பேசிய சீமான், "கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.
ஆனால் இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, இம்முறை மட்டும் பங்கேற்பதற்கான அவசியம் என்ன?
திடீரென டெல்லி செல்லும் போது அமலாக்கத்துறை சோதனைக்காக செல்கிறீர்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அதேபோல பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போது கூட முதல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பேரணியை நடத்தினார். பாஜக முதல்வர்கள் கூட பேரணியை அறிவிக்கவில்லை.

இந்தியாவின் பதில் தாக்குதலை ஆதரித்து சென்னையில் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது. போருக்கு ஆதரவாக பேரணியை நடத்திய முதலாவது நபர் முதல்வர் ஸ்டாலின்தான்.
அரசியல் லாபத்திற்காக திமுகவுடன் இணக்கமாக இருக்கவே பாரதிய ஜனதா விரும்புகிறது” என்று சீமான் ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs