Oscars 2025 : 97வது ஆஸ்கர் விருது விழா... எந்த ஓடிடியில், எப்போது காணலாம்? வெளியான அப்டேட்!
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சிறந்த படைப்புகள், கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு பிரிவுகளில் இவ்விருகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் 2025 ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.
இந்திய நேரப்படி மார்ச் 3ம் தேதி திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் விருது விழா நடைபெறவிருக்கிறது. 'ஜியோ ஹாட்ஸ்டார்' மற்றும் 'ஸ்டார் மூவீஸில்' மூலம் இந்நிகழ்ச்சியைக் காணலாம்.

நாமினேட்டாகியிருக்கும் திரைப்படங்கள்
இந்த ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ). இத்திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு.
இதை தாண்டி புரூட்டலிஸ்ட் (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. விக்கட் (WICKED) என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்பிளிட் அன்னோன்(A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.

எமிலியா பெரெஸ், விக்கட் , டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் திரைப்படங்களெல்லாம் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி இருப்பதால் இத்திரைப்படங்கள் இடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா (PRIYANKA CHOPRA) மற்றும் குனீத் மோங்கா (GUNEET MONGA) தயாரித்த `அனுஜா' என்ற குறும்படம் மட்டும் `சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)' பிரிவில் தேர்வாகியுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...