செய்திகள் :

Parineeti Chopra: 'எங்களின் சிறிய பிரபஞ்சம்' - கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பரிணீதி சோப்ரா

post image

2011 ஆம் ஆண்டு 'Ladies vs Ricky Bahl' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பரிணீதி சோப்ரா.

'Ishaqzaade'என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர்.

தவிர 'Golmaal Again', 'Shuddh Desi Romance' என பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

பரிணீதி சோப்ரா - ராகவ் சதா
பரிணீதி சோப்ரா - ராகவ் சதா

பாலிவுட் திரையுலகில் நடிகை என்பதைத் தாண்டி இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கிறார் பரிணீதி சோப்ரா.

இவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதாவும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதைப் பரிணீதி சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

'எங்களின் சிறிய பிரபஞ்சம் வந்துகொண்டிருக்கிறது. அளவற்ற ஆசிர்வாதத்தில் நாங்கள் திளைத்து இருக்கிறோம்' என்று பதிவிட்டிருக்கிறார்.

பரிணீதி சோப்ரா - ராகவ் சதா இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" - வழக்கறிஞர் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 2024ம் ஆண்டு டிசம்... மேலும் பார்க்க

Govinda: "துரோகம், திருமணம் மீறிய உறவு" - நடிகர் கோவிந்தாவிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி மனு

பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பியுமான கோவிந்தாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கோவிந்தா தனது மனைவியுடன் தங்காமல் தங்களது வீட்டிற்கு எதிரில் இர... மேலும் பார்க்க

Anurag Kashyap: "திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும்!" - அனுராக் காஷ்யப் காட்டம்!

மும்பையில் உள்ள 'KWAN' கலெக்டிவ் நிறுவனம் மற்றும், கலெக்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நெட்வர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சுப்பிரமணியம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்துள்ள "சிரஞ்சீவி ஹனு... மேலும் பார்க்க

Irrfan Khan: "இர்பானுடைய மரணத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை!" - இர்பான் கானின் மனைவி

பாலிவுட் நடிகர் இர்பான் கான் கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய மனைவி சுதாபா சிக்தர் தற்போது ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். சுதாபா சிக்தர் ஒரு பெங்காலி. டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு ... மேலும் பார்க்க

Akshay Kumar: "6.30 மணிக்கு இரவு உணவு; வாரத்தில் ஒரு நாள் விரதம்" - அக்‌ஷய் குமாரின் இளமை ரகசியம்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தான் மிகவும் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அக்‌ஷய் குமார், ''எனது வாழ்க்கை மிகவும்... மேலும் பார்க்க

Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷாருக்கான் வேண்டுகோள்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆர்யன் கான் இயக்கும் இந்தப் தொடரில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வ... மேலும் பார்க்க