செய்திகள் :

PBKS vs LSG: Catches win the Matches; பூரானின் அந்த மிஸ்டேக்; பஞ்சாப் பயன்படுத்திக்கொண்டது எப்படி?

post image

தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும், ப்ரப்சிம்ரன் சிங்கும் ஓப்பனிங்கில் களமிறங்கினர்.

பூரான் விட்டது கேட்ச் அல்ல... மேட்ச்!

லக்னோவுக்காக முதல் ஓவரை வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மகாராஜ் சிங், முதல் ஓவரிலேயே, இந்த சீஸனின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யாவை விக்கெட் எடுத்து தனது அணிக்கு நல்ல மொமன்ட்டம் ஏற்படுத்திக்கொடுத்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ், எதுவுமே நடக்காதது போல் தான் சந்தித்த முதல் நான்கு பந்துகளை 4,6,6,6 என பறக்கவிட்டார்.

ஜோஷ் இங்கிலிஷ்
ஜோஷ் இங்கிலிஷ்

அவரைத்தொடர்ந்து, மற்றொரு ஓப்பனர் ப்ரப்சிம்ரன் தன் பங்குக்கு, 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டினார். இந்த இடத்தில்தான் 5-வது ஓவரை வீசிய ஆகாஷ் மகாராஜ் சிங், அதிரடியாக பேட்டை சுழற்றிக்கொண்டிருந்த ஜோஷ் இங்கிலிஷை (14 பந்துகளில் 30 ரன்கள்) வீழ்த்தினார். அதன்பின்னர், ப்ரப்சிம்ரனுடன் கைகோர்த்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், முதல் பந்தையே பவுண்டரி அனுப்பி ரன் கணக்கைத் தொடங்கினார்.

ப்ரப்சிம்ரன் சிங்
ப்ரப்சிம்ரன் சிங்

அடுத்து, மேட்ச் டர்னிங் மொமென்ட்டுகள் ஏற்படும் பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் ஆவேஷ் கான். அதற்கேற்றாற்போலவே, அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே ப்ரப்சிம்ரனின் கேட்ச் வாய்ப்பு வந்தது. ஆனால், கைக்கு வந்த பெரிய கஷ்டமில்லாத கேட்சைத் தவறவிட்டார் பூரான். அந்த கேட்ச் டிராப் ஆனபோது பஞ்சாப்பின் ஸ்கோர் 58. மொத்தமாக பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் குவித்தது பஞ்சாப்.

வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ப்ரப்சிம்ரன்!

அந்த ஒருமுறை தவறு செய்த ப்ரப்சிம்ரன், அதன்பிறகு அடித்த பந்துகளெல்லாம் பிசிரே இல்லாமல் பவுண்டரிகளை கிளியர் செய்தது. பவர்பிளேவுக்குப் பிறகு ப்ரப்சிம்ரன் - ஸ்ரேயஸ் கூட்டணி ஒரு ஓவருக்கு ஒன்றிரண்டு பவுண்டரி போதும் என நிதானமாக ஆடி 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப்பின் ஸ்கோரை 100-க்கு உயர்த்தியது. அடுத்த ஓவரிலேயே சிங்கிள் எடுத்து இந்த சீசனில் தனது 4-வது அரைசதத்தை நிதானமாகக் கடந்தார் ப்ரப்சிம்ரன்.

ப்ரப்சிம்ரன்
ப்ரப்சிம்ரன்

மறுமுனையில், தேவைக்கேற்ப பவுண்டரி, சிக்ஸ் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஸ்ரேயஸ், திக்வேஷ் வீசிய 13-வது ஓவரில் சிக்ஸ் அடித்த பந்திலேயே 45 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர், களமிறங்கிய நேஹல் வதேராவும் அவரைப் போலவே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். 14-வது ஓவரில் வதேராவின் சிக்ஸுடன் 10 ரன்கள் வர, மீண்டும் திக்வேஷ் வீசிய 15-வது ஓவரில் ப்ரப்சிம்ரன் இரண்டு சிக்ஸர் அடித்து அந்த ஓவர் முடிவில் பஞ்சாப்பின் ஸ்கோரை 150-ஐ கடக்க வைத்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே நேஹல் வதேராவை 16 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் பிரின்ஸ் யாதவ்.

என்னதான் லக்னோ பவுலர்கள் விக்கெட் எடுத்தாலும், ஆட்டத்தின் போக்கு முழுக்க பஞ்சாப் பேட்டர்கள் வசமே இருந்தது. வதேரா விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய ஷஷாங் சிங், 17-வது ஓவரில் ஒரு பந்தை ஸ்டேடியதுக்கு வெளியே தூக்கியடித்து பிரமிக்க வைத்தார். அடுத்து, ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளை 6,4,6 என விளாசிய ப்ரப்சிம்ரன், 19-வது ஓவரில் திக்வேஷின் பந்தில் பூரான் கைகளில் 91 ரன்களில் கேட்ச் அவுட்டானார். முதலில் ப்ரப்சிம்ரன் கேட்ச் டிராப் ஆனபோது 58 என்றிருந்த பஞ்சாப்பின் ஸ்கோர், அவர் அவுட்டானபோது 216. இறுதியாக, கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸின் சிக்ஸ், ஷஷாங்கின் பவுண்டரியுடன் 20 ஓவர்கள் முடிவில் 236 ரன்களைக் குவித்தது பஞ்சாப்.

மிகப்பெரிய டார்கெட்... தொடக்கத்திலேயே விழுந்த லக்னோ!

பூரான், மில்லர் போன்ற க்ளீன் ஹீட்டர்களை வைத்திருந்தாலுமே 237 என்பது லக்னோவுக்குப் பெரிய டார்கெட்தான். அதனால், பவர்பிளேயில் விக்கெட் விடக்கூடாது என்ற எண்ணத்துடன் களமிறங்கிய மார்க்ரம் - மார்ஷ் முதல் 2 ஓவர்களில் நிதானமாக ஆடி 15 ரன்களைச் சேர்ந்தது. அதில், மார்ஷ் ஒரு ரன்களைக் கூட அடிக்கவில்லை. இந்த இடத்தில்தான், மூன்றாவது ஓவரில் மார்ஷை 0 ரன்னிலும், மார்க்கரமை 13 ரன்னிலும் அவுட்டாக்கினார் அர்ஷதீப் சிங்.

அர்ஷதீப் சிங் - பூரான்
அர்ஷதீப் சிங் - பூரான்

மீண்டும் அர்ஷதீப் சிங் ஐந்தாவது ஓவரில் பூரானை பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே 6 ரன்களில் அவுட்டாக்கி லக்னோவின் டாப் ஆர்டரை தனியாளாக பெவிலியனுக்கு அனுப்பினார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஆயுஷ் பதோனியின் சிக்ஸருடன் 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களைக் குவித்தது லக்னோ.

வந்தான்... அவுட்டானான்... போனான் ரிப்பீட்டு; எண்டே இல்லாத பண்ட்டின் லூப் மோட்!

இந்த இடத்தில்தான், இந்த மேட்ச்சிலாவது அடிக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்குள்ளான கேப்டன் பண்ட், சஹால் வீசிய 7-வது ஓவரில் முதல் பந்தையும், கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி லக்னோ ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கையளிப்பது போல காட்சியளித்தார். அடுத்த ஓவரிலே, அஸ்மதுல்லாஹ் பந்துவீச்சில் பேட்டை வானத்தில் பறக்கவிட்டு 18 ரன்களில் கேட்ச் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரும், சஹால் வீசிய 9-வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து, அஸ்மதுல்லாஹ் வீசிய 10-வது ஓவரில் 11 ரன்களில் அவுட்டானார். 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்தது லக் இல்லாத லக்னோ.

பேஸ்ட் மோடில் ஆயுஷ் பதோனி - அப்துல் சமாத் காம்போ... ஆனாலும் வெற்றி பஞ்சாப்புக்கு!

லக்னோவின் முக்கிய பேட்ஸ்மேன்களெல்லாம் காலி, வெற்றி நமக்குத்தான் என பஞ்சாப் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் கைகோர்த்தது ஆயுஷ் பதோனி - அப்துல் சமாத் கூட்டணி. விஜய்குமார் வைசாக் வீசிய 12-வது ஓவரில் மட்டும் ஆயுஷ் பதோனி - அப்துல் சமாத் கூட்டணி இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடித்து அதிரடிக்கான இன்டென்ட்டை காண்பித்தது.

அடுத்து, சஹால் வீசிய 13-வது ஓவரில் தனியாளாக இரண்டு சிக்ஸர் அடித்தார் அப்துல் சமாத். அடுத்த மூன்று ஓவர்களில் இந்தக் கூட்டணியிடமிருந்து வெறும் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் மட்டுமே வர 16 ஓவர்கள் ஓவரில் முடிவில் 150 ரன்களைக் குவித்தது லக்னோ. இந்த சமயத்தில், 17-வது ஓவரை வீச வந்த மார்கோ யன்சன், 2 பவுண்டரி, 4 சிக்ஸ் என அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அப்துல் சமாத்தை 45 ரன்களில் அவுட்டாக்கினார்.

அப்துல் சமாத்
அப்துல் சமாத்

இருப்பினும், 18-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த ஆயுஷ் பதோனி, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், அஸ்மதுல்லாஹ் வீசிய 19-வது ஓவரில் ஒரு சிக்ஸும், பவுண்டரியும் அடித்தார். ஆனாலும், கடைசி ஓவரில் சஹாலின் பந்துவீச்சில் முதல் பந்திலேயே அவுட்டானார்.

ஆயுஷ் பதோனி
ஆயுஷ் பதோனி

களத்தில் நின்றவரை அதிரடி காட்டிய ஆயுஷ் பதோனி 5 சிக்ஸ், 5 பவுண்டரி என 40 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு லக்னோ 199 ரன்கள் மட்டுமே அடிக்க, 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப்.

Jio Star : 'அடுத்த மூன்றாண்டுகளில் 83,000 கோடி முதலீடு!' - ஜியோ ஸ்டாரின் திட்டம் என்ன?

ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 83,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்தியாவில் யூடியூப் செய்திருக்கு... மேலும் பார்க்க

PBKS vs LSG: `ஆரம்பத்தில் அதைக் கணிக்கத் தவறிவிட்டேன்; பின்னர்தான்...’ - ஆட்ட நாயகன் ப்ரப்சிம்ரன்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

PBKS vs LSG: "இன்னும் நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயம்..." - வெற்றிக்குப் பின் ஸ்ரேயஸ்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

'பீகார் மண்ணின் மகன் சிறப்பாக விளையாடி வருகிறார்; இளம் வயதில்...' - சூர்யவன்ஷியைப் பாராட்டிய மோடி

நேற்று( மே 4) ‘கேலோ இந்தியா’ போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகி... மேலும் பார்க்க

PBKS vs LSG: `எப்போதும் டாப் ஆர்டரையே நம்பிக்கொண்டிருக்க முடியாது' -தோல்விக்குப் பின் பண்ட் விரக்தி

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

CSK: 'வெற்றியோ, தோல்வியோ... கர்ஜித்துக்கொண்டே இருங்கள்'- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. cskவெறும் இ... மேலும் பார்க்க