செய்திகள் :

Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி

post image

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ்'. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார்.

சூர்யா சேதுபதி
சூர்யா சேதுபதி

கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இன்று (5/7/2025) கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்தார் சூர்யா விஜய் சேதுபதி.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "'ஃபீனிக்ஸ்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதுதான் ஒரு காட்சி பார்த்தோம், மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ரொம்பவும் ரசித்துப் பார்த்தார்கள்.

கோவை மக்கள் நன்றாகப் பழகுகிறார்கள், எப்போதுமே கோவை மக்கள் அப்படித்தான். முன்பு அப்பாவின் படத்தின் ஷூட்டிங் இங்கு நடக்கும்போது அவருடன் வந்திருக்கிறேன்.

பீனிக்ஸ் படத்தில்...
பீனிக்ஸ் படத்தில்...

இப்போது என்னுடைய படம் வெளியாகி, அதைப் பார்க்க வந்தது நல்ல உணர்வாக இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டரை வருட ஷூட்டிங்கில் நான் இருந்திருக்கிறேன். முன்பு, ஷூட்டிங் எடுத்தபோது, இப்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொண்டேன். இது வெறும் தொடக்கம்தான், இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பயணமும் ரொம்ப அழகாக இருக்கிறது.

அப்பா படம் பார்த்துவிட்டு செம ஹாப்பி. மக்களுக்கு இந்த மாதிரி ஆக்ஷன் பிடித்திருக்கிறது, என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்து யாராவது இயக்குநர் இந்த மாதிரி கதை எடுத்துவந்தால் பண்ணலாம். அதைத் தவிர, எந்தக் கதையாக இருந்தாலும் பண்ணத் தயார்." என்றார்.

இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக 'சிந்துபாத்' திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Paranthu Po: "ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்..." - 'பறந்து போ' குறித்து இயக்குநர் அட்லி

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப... மேலும் பார்க்க

Freedom: "அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?" - பட விழாவில் சசிக்குமார்

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் 'ஃப்ரீடம்' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கி... மேலும் பார்க்க

Lucky Baskar 2: "பயோபிக் எடுக்கச் சொன்னார்கள், ஆனால்; 'லக்கி பாஸ்கர் 2' வரும்!" - வெங்கி அத்லூரி

இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது. அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குந... மேலும் பார்க்க

Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.." - தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!

அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'டைட்டானிக்'. ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் 'இறுதிச் சுற்று' படத்தில் உ... மேலும் பார்க்க

Jason Sanjay: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஜேசன் சஞ்சய்! - முழு விவரம் என்ன?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.... மேலும் பார்க்க