செய்திகள் :

Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

post image
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (டிசம்பர் 15) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி இலங்கை - தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain: `பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?’ - பருவமழை குறித்து பாலச்சந்திரன் கொடுத்த அப்டேட்

2024 ஆம் ஆண்டிற்கான பருவமழை குறித்து தென் மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இதுதொடர்பாகப் பேசிய பாலசந்திரன், “வடகிழக்கு பருவமழை காலத்தில் 6 மாவட்டங்... மேலும் பார்க்க

Rain Alert: நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ன ஆகும்... எந்த மாவட்டங்களில் மழை?!

நேற்று முதல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை 10 மணி வரை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச... மேலும் பார்க்க

நீலகிரி: 'புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது..!' - ஊட்டியில் கடும் குளிர் | Photo Album

ஊட்டியில் கடும் குளிர்frost at ooty frost at ootyfrost at ootyfrost at ooty frost at ooty frost at ootyfrost formed in car windshildfrost formed in car windshildfrost formed in car windshildfrost form... மேலும் பார்க்க

Dhanushkodi: "60-ம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்..." - சோக நினைவுகளைப் பகிரும் நேரில் பார்த்த சாட்சி

காற்றின் வேகத்தால் திரும்பி நின்ற கைகாட்டி... கடல் அலையின் கோரத்தால் கவிழ்ந்து போன ரயில் பெட்டி..! தனுஷ்கோடியை மூழ்கடித்த ஆழிப்பேரலையின் 60 ஆம் ஆண்டு..ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் துறைமுக நகரமான ... மேலும் பார்க்க

Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல் என்ன?

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவந்த நிலையில், அ... மேலும் பார்க்க

Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் `வலுப்பெறும்'... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது‌.இந்த நிலையில், வானிலை மைய அறிக்கையின் படி, வரும் டிசம்பர் 22-ம் தேதி, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த கா... மேலும் பார்க்க