செய்திகள் :

Rain Alert: 'புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், " தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது.

rain alert
rain alert

சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பெய்துள்ளது. இயல்பாகப் பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ, ஆனால் 7.4 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை (மே 20) கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

அது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?

'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது. கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை ... மேலும் பார்க்க

Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

ஊட்டி: 2 மணி நேரம் கொட்டிக் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கனமழை கொட்டித் தீர்த்து வருக... மேலும் பார்க்க

TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருந... மேலும் பார்க்க

TN Rain: 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளா... மேலும் பார்க்க