Rain Alert : `இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?'
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் இன்னும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, உயிர் சேதம், கட்டட சேதம் ஆகியவையும் நடந்து வருகிறது.
இந்தத் தொடர் மழையால், இன்று சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை...
சேலம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நீலகிரி, ராணிப்பேட்டை, ஆகிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
நேற்று வெளியாகி உள்ள வானிலை மைய அறிக்கைபடி, "தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இந்த டிசம்பர் மாதம் இயல்பை விட 31 சதவிகித அதிக மழை பெய்யலாம்." அதனால், மக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.