Rohit Sharma: 'அதிரடி தொடக்கம்; ஆனாலும் ஃபெயிலியர்!' - ரஞ்சியில் மீண்டும் சொதப்பும் ரோஹித் சர்மா!
நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப்போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.
மும்பை அணிக்காக ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியிருக்கிறார். உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஷ், பார்டர்-கவாஸ்கர் டிராபி தோல்வி இவற்றுக்கெல்லாம் பிறகு பி.சி.சி.ஐ., இந்திய அணியின் வீரர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் ஆகியோருடன் தீவிரமாகக் கலந்து பேசிய பிறகு வீரர்களுக்கான 10 புதிய கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ., விதித்திருந்தது.
அதன்படி வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் பயணிப்பதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மிக முக்கியமாக இந்திய அணிக்கு ஆடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதையும் உறுதி செய்ய வேண்டும். காயம் எதுவுமின்றி நலமாக இருக்கும்பட்சத்தில் தவிர்க்காமல் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பி.சி.சி.ஐ., அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆட முன் வந்தார். ஜெய்ஸ்வாலும் ரோஹித்தும் மும்பைக்காக ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா வழக்கமாக வெளிக்காட்டும் அட்டாக்கிங் ஆட்டத்தை இங்கே ஆட விரும்பவில்லை. நின்று நிதானமாக ஆடவே நினைத்தார். ஆனாலும் அவரால் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உமர் என்கிற பௌலர் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை அரைகுறையாக லெக் சைடில் அடிக்க முயன்று டாப் எட்ஜ் வாங்கியிருந்தார்.
19 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இதே மாதிரியே ஒரு ஷார்ட் பாலுக்கு ஒரு இன்னிங்ஸில் விக்கெட்டை விட்டிருப்பார். இரண்டாவது இன்னிங்ஸிலும் வெறும் 28 ரன்களுக்கே ஆட்டமிழந்திருக்கிறார். இந்த இன்னிங்ஸில் அதிரடியாக ஆட முயன்றார் ரோஹித். முதல் இன்னிங்ஸில் தன் விக்கெட்டை வீழ்த்திய உமரின் பௌலிங்கில் பவுண்டரி சிக்சர்களையெல்லாம் அடித்து வெளுத்தார். ஆனாலும் யுத்வீர் என்பவரின் பௌலிங்கில் அரைகுறையாக ஆடி மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் ரஞ்சிக்கு வருகிறார்கள் என்றவுடன் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. தங்களின் இழந்த பார்மை மீட்டெடுப்பார்கள் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், இங்கேயும் அவர்கள் சொதப்புவது ரசிகர்களை வேதனையடைய வைத்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...