ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!
Russia: ``அணுசக்தி தொடர்பாக பேசும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்'' - ட்ரம்புக்கு பதிலளித்த ரஷ்யா
உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, `ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட அதன் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்." என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் இந்தியா, ``இந்தியாவை டார்கெட் செய்வது நியாயமற்றது. மற்ற பிற மிகப்பெரிய பொருளாதாரங்களைப் போல, இந்தியாவும் தனது தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு தேவையான விஷயங்களைச் செய்து வருகிறது" என பதிலளித்திருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்த உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``அனைவரும் அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ட்ரம்ப் நீர் மூழ்கிக் கப்பலை நகர்த்தும் கருத்துக்களுக்கு முன்பே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில்தான் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போருக்கு தயாராக இருப்பது வெளிப்படையானது. போருக்கு அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்பது முதல் விஷயம். ஆனால் நிச்சயமாக, நாங்கள் அத்தகைய சர்ச்சையில் ஈடுபட விரும்பவில்லை. மேலும் அணுசக்தி குறித்து எந்த வகையிலும் கருத்து தெரிவிக்க விரும்ப மாட்டோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.