செய்திகள் :

Sabih Khan: ஆப்பிள் நிறுவன COO-வாக சபிஹ் கான் நியமனம்; இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

post image

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், "நிறுவனத்தின் Senior Vice President of Operation அதிகாரியாக இருக்கும் சபிஹ் கான், இந்த மாத இறுதியில் ஜெஃப் வில்லியம்ஸ் வகித்துவந்த தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு மாறுவார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தில் 1995-ல் பணிக்கு சேர்ந்த சபிஹ் கான் தனது 30 ஆண்டுக்கால அனுபவம் மற்றும் திறமையால் இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார்.

Sabih Khan - சபிஹ் கான்
Sabih Khan - சபிஹ் கான்

இவரைப் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், "சபிஹ் ஒரு சிறந்த மூலோபாயவாதி. ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியின் மையக் கட்டமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மேம்பட்ட உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை முன்னோடியாகக் கொண்டுவர உதவியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், தனது மதிப்புகளால் சபிஹ் கான் முன்னிலையில் இருக்கிறார். நிச்சயம் சிறந்த தலைமை இயக்க அதிகாரியாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்று புகழ்ந்திருக்கிறார்.

மேலும், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சபிஹ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சபிஹ் கான்?

சபிஹ் கான் 1966-ம் ஆண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். சபிஹ் கானின் பள்ளிப்பருவத்திலேயே அவரின் குடும்பம் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது.

பின்னர் அங்கிருந்து, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றின்படி, அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இரட்டை இளங்கலை பட்டம் பெற்ற சபிஹ் கான், நியூயார்க்கில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் (Rensselaer Polytechnic Institute) இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

Sabih Khan - சபிஹ் கான்
Sabih Khan - சபிஹ் கான்

அதைத்தொடர்ந்து, ஜே.இ பிளாஸ்டிக்ஸ் (GE Plastics) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த சபிஹ் கான், 1995-ல் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்முதல் குழுவில் (Procurement Team) பணிக்கு சேர்ந்தார்.

மார்க்கெட்டுக்கு ஆப்பிளின் புதுப்புது தயாரிப்புகளைக் கொண்டுவருவதிலும், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு உத்தியை வடிவமைப்பதிலும் முக்கிய பணியாற்றிய சபிஹ் கான், 2019-ல் Senior Vice President of Operation பதவியில் அமர்த்தப்பட்டார். இப்போது ஆப்பிள் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் அனுபவத்துடன் தலைமை இயக்க அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

Bitchat: இனி Chat செய்ய Internet தேவையே இல்ல... X இணை நிறுவனரின் புதிய அறிமுகம் பிட்சாட் செயலி!

AI கோலோச்சும் உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை எக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தியிருக்கிறார். வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்,... மேலும் பார்க்க

BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு ம... மேலும் பார்க்க

Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளிய... மேலும் பார்க்க

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது.இந்த தீவை, புதிய நாடாக உருவ... மேலும் பார்க்க

Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜினியரிங் வளர்ச்சிகள்

ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலக... மேலும் பார்க்க

கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?

கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின்... மேலும் பார்க்க