செய்திகள் :

Bitchat: இனி Chat செய்ய Internet தேவையே இல்ல... X இணை நிறுவனரின் புதிய அறிமுகம் பிட்சாட் செயலி!

post image

AI கோலோச்சும் உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை எக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஸ்னாப் எனப் பிறருடன் சாட் செய்வதற்கு இன்டர்நெட் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாத சூழலில், டவர் கிடைக்காத சூழலில் அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற சூழல்களில் பிறருக்குத் தகவல் தெரிவிக்க முடியாத சிக்கல் ஏற்படும்.

பிட்சாட்
பிட்சாட்

இதைச் சரிசெய்யும் விதமாக இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் 'பிட்சாட்' எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தச் செயலி புளூடூத் மெஷ் நெட்வொர்க்குகளில் இயங்குகிறது.

இது பயனர்களின் மொபைல் டேட்டா, சிம் கார்டுகள், வைஃபை நெட்வொர்க்குகள் என எதையும் பயன்படுத்தாமல் ரகசிய உரையாடல்களுக்குப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்த பதிவு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை.

தனியுரிமை என்ற அடிப்படையில் எந்தப் பயனர்பெயர்களின் பெயரையும் பதிவு செய்யத் தேவையில்லை. இந்தச் செயலியைத் தற்காலிக செய்திகளை அனுப்புவதில் தொடங்கி குழு அரட்டையோடு, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உரையாற்றவும் பயன்படுத்த முடியும்.

ஏற்கெனவே ஆஃப்லைன் புரோட்டோகால் மூலம் ஃபெர்ன்வே (fernweh.chat) போன்ற பிற தளங்கள் மெஷ் அடிப்படையிலான செய்தியிடல்களை வழங்கிவரும் நிலையில், பிட்சாட் செயலி போட்டி நிறைந்த பகுதியில் நுழைந்திருக்கிறது.

Jack Dorsey
Jack Dorsey

டிஜிட்டல் உலகில் பல்வேறு மோசடிகளும் தவறான செயல்பாடுகளும் அதிகரித்துவரும் நிலையில், ஆஃப்லைனில் செயல்படும் பிட்சாட் செயலியானது தனியுரிமையை மீறாமல் பயனரை இணைப்பில் வைத்திருப்போம் என உறுதியளிக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Sabih Khan: ஆப்பிள் நிறுவன COO-வாக சபிஹ் கான் நியமனம்; இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், "நிறுவனத்தின் Senior Vice President... மேலும் பார்க்க

BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு ம... மேலும் பார்க்க

Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளிய... மேலும் பார்க்க

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது.இந்த தீவை, புதிய நாடாக உருவ... மேலும் பார்க்க

Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜினியரிங் வளர்ச்சிகள்

ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலக... மேலும் பார்க்க

கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?

கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின்... மேலும் பார்க்க