இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?
சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கான வழிமுறையை பார்ப்போம்.
பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி கார்டுக்கு மாறுவது எப்படி?
பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் சி.எஸ்.சி (BSNL CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களைக் கண்டறியவும்.
கண்டறிந்த விற்பனையாளரிடம் செல்லும்போது, ஆதார் அல்லது அரசு சம்பந்தமான எதாவது ஒரு ஆவணத்தை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.
பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி - எந்த சிம் கார்டுக்கு மாற விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவிக்கவும்.
இந்த ஆவணங்களைக் கொடுப்பதன் மூலம் e-KYC நடைமுறை முடியும்.
இதெல்லாம் முடிந்த உடன், உங்களுக்கு பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு கொடுப்பார்கள்.
அதை, அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளின் படி, ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும்.
ஆன்லைனில் பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு பெறுவது எப்படி?
sancharaadhaar.bsnl.co.in - இந்த இணையதளத்தைக் க்ளிக் செய்யவும்.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும், e-KYC படிவத்தை நிரப்புங்கள்.
ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு - இதில் ஏதேனும் ஒரு இணைப்பைத் தேர்வு செய்யவும்.
பின்னர், கேட்கப்படும் தகவல்களைப் பதிவிடுங்கள்.
உங்கள் மொபைல் நம்பரை சரிபார்க்க, உங்களது மொபைல் நம்பருக்கு OTP வரும், அதை நிரப்பிக்கொள்ளுங்கள்.
அனைத்துத் தகவல்களை நிரப்பி, சப்மிட் கொடுத்தால், உங்கள் வீட்டிற்கே சிம் கார்டு வந்துவிடும்.