செய்திகள் :

Samantha: ``ஐயோ, மீண்டும் வந்துவிட்டதா?" - வைரலான மார்க் சீட்; சமந்தாவின் `கியூட்' ரியாக்ஷன்!

post image

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரம் சமந்தா பள்ளி காலத்தில் பெற்ற பாராட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உற்சாகத்துடன் திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார் சமந்தா. அவர் தாண்டிய தடைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் பாராட்டும் நிலையில், அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சமூக ஊடகத்தில் வெளியாகியிருக்கிறது.

சமந்தா மதிப்பெண் பட்டியல்
சமந்தா மதிப்பெண் பட்டியல்

அனைத்துப் பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளியிலும் முதன்மை மாணவியாகவே வலம் வந்திருக்கிறார். அந்த சான்றிதழில் அவரின் ஆசிரியர் ஒருவர், 'அவள் பள்ளியின் சொத்து' எனப் பாராட்டி எழுதியிருக்கிறார். அதை சமூக ஊடக வாசிகள் பலரும் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர். இந்தப் பதிவை பகிர்ந்திருந்த சமந்தா, ``இது மீண்டும் வந்துவிட்டதா... ஐயோ" என சிரித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவுக்கு கீழே அவரின் ரசிகர்கள், தங்கள் பள்ளி காலங்களின் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் பதிவு செய்து வருகின்றனர்.

மும்பை: ``நிறுத்துங்க, நான் ஏறணும்..'' - விமானத்தை நோக்கி ஓடிய பயணி, சுற்றி வளைத்த அதிகாரிகள்

விமான பயணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும் என்று சொல்வார்கள். பஸ், ரயில் போன்று விமான பயணத்திற்கு தாமதமாக செல்ல முடியாது. ஒருமுறை கேட் மூடப்பட்டுவிட்டால் அதன் பிறகு விமானத்தில் பயணிக... மேலும் பார்க்க

``அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' - பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அ... மேலும் பார்க்க

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்ற... மேலும் பார்க்க

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க