செய்திகள் :

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்து ஆதரித்த பாகிஸ்தான், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியிருக்கிறது.

என் நரம்புகளில் இரத்தம் ஓடவில்லை... சூடான சிந்தூர் (குங்குமம்) ஓடுகிறது" என உரையாற்றினார்.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

இதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `"வெறுமனே பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள் என்று சொல்லுங்கள்?

ட்ரம்ப் இட்ட கட்டளைக்குத் தலைவணங்கி இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?

இந்தியாவின் கண்ணியத்தைக் காப்பதில் நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``பிரதமர் மோடியின் உரையை நீங்கள் தாமதமாகப் பார்த்ததாகத் தெரிகிறது. அந்த உரையைக் கேட்க இன்னும் 10 நாள் கூட தள்ளிப்போயிருக்கலாம்.

அதுவும் நல்லதுதான். காங்கிரஸ் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குக் காதல் கடிதம் அனுப்பியது போல மோடி அரசு செயல்படாது.

நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான பதிலடியை அளித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் 'ரஷ்யாவின் நிழற் கடற்படை' யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன. மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து... மேலும் பார்க்க

'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்கை!

'அரக்கோண சம்பவம் - தவெக கண்டனம்!'அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்... மேலும் பார்க்க

`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்... விவரம் என்ன?

'புகாரளித்த சவுக்கு சங்கர்!'சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவ... மேலும் பார்க்க

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரி... மேலும் பார்க்க

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க