செய்திகள் :

Sridevi: 'அவருடைய 27-வது பிறந்தநாளில்...'- ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த போனி கபூர்

post image

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் கணவர் போனி கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஸ்ரீதேவி - போனி கபூர்
ஸ்ரீதேவி - போனி கபூர்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "1990-ல் சென்னையில் அவரது பிறந்தநாள் விழாவில், நான் அவருக்கு 26-வது பிறந்தநாள் வாழ்த்து கூறினேன், ஆனால் அது உண்மையில் அவரது 27-வது பிறந்தநாள்.

இது அவரை இளமையாக உணர வைக்கும் ஒரு புகழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் அவர் இளமையாகிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல விரும்பினேன். ஆனால், அவர், நான் கிண்டல் செய்கிறேன் என்று நினைத்தார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்திய திரைத்துறையின் அடையாளமாக விளங்கிய ஸ்ரீதேவி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துத், தேசிய விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: `இளையராஜா - தேவா' - 'கூலி' படத்தில் 2 ரெட்ரோ பாடல்கள் இதுதான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்தரா, செளபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் எனப் பலரும் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குக... மேலும் பார்க்க

Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?

விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களை வைத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகிறார் சைமன் (நாகர்ஜுனா). சைமனுடைய விசுவாசியான தயாள் (சௌபின் ஷாஹிர்), மொத்த து... மேலும் பார்க்க

Coolie: "அடுத்து அஜித் குமாரை வைத்து படம் எடுப்பீர்கள்?" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபே... மேலும் பார்க்க

Stray Dogs: ``ஒன்னும் புரியல; நாட்டை நினைச்சு வெட்கப்படுறேன்'' -கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சதா

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும்... மேலும் பார்க்க

Coolie: ``படத்திற்கான வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார்' - லதா ரஜினிகாந்த்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ... மேலும் பார்க்க