கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
Stalin: `வடசென்னையை வளர்ந்த சென்னையாக்குவோம்; 90% வாக்குறுதிகள்..!“ - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று (பிப்19) சென்னை புளியந்தோப்பில் 712 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து அந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், வட சென்னையின் வளர்ச்சி குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம் என்றும் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம்.

வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அந்நிலையை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது. வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1000 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ₹1000 கோடி இல்லை, ₹6400 கோடியாக வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசியவர், "தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம். அறிவிக்கப்பட்ட எஞ்சிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை. தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play