மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
Stray Dogs: ``ஒரு பாலியல் குற்றவாளிக்காக எல்லோரையும் அழித்துவிடுவீர்களா?” - நாய்களுக்கு ஆதரவாக கனிகா
டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கனிகாவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "திடீர்னு உங்களை உங்க வீட்ல இருந்து தூக்கி வேற இடத்துல வச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த பூமி நம்மை போலதானே நாய்களுக்கும்? அவற்றை ஒழிக்க நினைக்க நாம் யார்?
ஒரு நாய் கடித்ததென எல்லா நாயையும் தண்டிப்பதா? எனில் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்காக மனிதர்கள் எல்லோரையும் அழித்துவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...