கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகங்கள்: பொதுப்பணித் துறை சாதனைகள் குறித்து அரசு...
Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!
ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார்.

சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவன பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-லிருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது.
அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 9000 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இன்று உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.