மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணைய...
Sunita Williams: விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்று கிட்டதிட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர பல ஏற்பாடுகள் செய்யப்பட்டும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
தற்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவை அழைத்து வர நேற்று இரவு விண்ணில் பாய்ந்துள்ளது.
நாசாவின் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி, ரஷ்யாவின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு கிளம்பியுள்ளனர். இன்று விண்வெளிக்கு சென்று சேரவிருக்கும் இவர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் அங்கே பார்த்துக்கொண்டிருக்கும் திட்டத்தை கையிலெடுப்பார்கள். இதன் நடைமுறைகள் முடிந்தப்பின்னர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் அடுத்த வாரம் பூமிக்கு கிளம்ப உள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்றனர். ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால், அவர்கள் மீண்டும் பூமிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் கேப்சூலில் கோளாறு ஏற்பட மீண்டும் தாமதமானது.
அவர்கள் முதன்முதலாக திரும்பி வரவிருந்த ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டு, அவர்கள் திரும்பாத போதே, அவர்களை மீண்டும் பூமிக்கு சீக்கிரம் அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்தன.
இன்னொரு பக்கம், அவர்கள் அங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாகத் தான் கழித்து வந்தனர். ஸ்பேஸ் ஸ்டேஷனின் பராமரிப்பு பணிகள், பரிசோதனைகளை செய்வது என தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தனர். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண்மணி என்ற சாதனையை கூட இந்த காலத்தில் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப்போது, 'சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களே காரணம்' என்று பரபரப்பு குற்றம் சாட்டினார். இதற்கு முன்பு ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் மூலம் அவர்களை அழைத்து வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தாலும், மீண்டும் இப்போது ட்ரம்ப்பின் நண்பர் எலான் மஸ்க்கின் அதே நிறுவனத்தின் ராக்கெட் மூலம் தான் பூமி திரும்ப உள்ளனர் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும்.
Liftoff of Crew-10! pic.twitter.com/OOLMFQgA52
— SpaceX (@SpaceX) March 14, 2025
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks