செய்திகள் :

Suriya: "அன்று ரிசர்வேஷன் செய்ய க்யூ நின்றது" - சூர்யா ரசிகர்களுக்கு தாணு கொடுக்கும் சர்ப்ரைஸ் என்ன?

post image

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி அன்றுதான் 'காக்க காக்க' படம் வெளியானது. இப்போது 22வது ஆண்டைக் கொண்டாடுகிறது. தாணுவின் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், பல மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியைக் குவித்தது.

இந்தப் படத்தை விரைவில் ரீரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் தாணு. சூர்யாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. இதற்கு முன் 'உயிரில் கலந்தது', 'மௌனம் பேசியதே' என மென்மையான கதைகளில் நடித்து வந்த சூர்யாவை ஆக்‌ஷன் மோடிற்குத் திருப்பிவிட்ட படம் 'காக்க காக்க' தான்.

பாலாவின் 'நந்தா'வைப் பார்த்த கௌதம் மேனன், தன்னுடைய அன்புச்செல்வன் ஐபிஎஸ், சூர்யாதான் எனக் கண்டு கொண்டு, 'காக்க காக்க'வில் நடிக்க வைத்தார்.

காக்க காக்க
காக்க காக்க

இது குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் பேசினோம்.

'''காக்க காக்க' ட்ரென்ட் செட்டை ஏற்படுத்தின படம்னு சொல்லலாம். இந்தப் படம் வெளியான அன்று ரிசர்வேஷன் செய்ய, மவுண்ட் ரோட்டில் தேவி பாரடைஸ் தியேட்டரில் இருந்து சாந்தி தியேட்டர் வரை மிகப்பெரிய க்யூ நின்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.

சூர்யா, ஜோதிகா
சூர்யா, ஜோதிகா

ஏசிபி அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக சூர்யா நடித்திருந்தார். காவல் துறையின் மீது மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் ஏற்படுத்திய படம். அன்புசெல்வன் போலக் கம்பீரமாகப் பெயரெடுக்க வேண்டும் என போலீஸில் பலரும் விரும்பினார்கள். அதைப் போல, இளைஞர்கள் பலரும் போலீஸில் சேரவேண்டும் என விரும்பினார்கள்.

இந்தப் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் 'gharshana' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். கௌதம் மேனனே இயக்கியிருந்தார். அதன் வெற்றி வெங்கடேஷிற்குப் பெரியதொரு ரீஎன்ட்ரியைக் கொடுத்தது. அதைப் போல இந்தியில் 'force' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'dandam dashagunam' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றி வாகை சூடியது.

தாணு
தாணு

இப்படிப் பல பெருமைகளைக் கொடுத்திருக்கும் 'காக்க காக்க'வை ரீரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். கமலின் 'ஆளவந்தான்', விஜய்யின் 'சச்சின்' படங்களை ரீரிலீஸ் செய்ததைத் தொடர்ந்து 'காக்க காக்க'வையும் ரீரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறோம். 22வது ஆண்டு ஸ்பெஷலாக வருகிற ஒன்றாம் தேதி இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகிறது.'' என்கிறார் தாணு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: படத்தின் இன்டர்வெல் வசனம், குறைவில்லாத மாஸ் காட்சிகள்! - லோகேஷ் பகிர்ந்த முக்கியமான தகவல்கள்

'கூலி' படத்தின் வெளியீட்டுக்கு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். 'கூலி' திரைப்... மேலும் பார்க்க

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் விழா: 6 ஆயிரம் மாணவர்கள்; பங்கேற்கும் டாப் பிரபலங்கள் யார் யார்?!

சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா எடுக்கின்றனர். suriyaசில மாதங்களுக்கு முன்னர் அகரம் ப... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "ஒரு பஸ் கன்டெக்டரின் மகனாக எனக்கு..." - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். Coolie - Chikitu Songலோகேஷ... மேலும் பார்க்க

`இது விஜய்க்கு எழுதிய கதை’ - சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `கிழக்கு சீமையிலே’ விக்னேஷ்

கிழக்கு சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சொந்த ஊரான ஈரோடு சென்று தொழில் செய்து வந்தார். இந்... மேலும் பார்க்க