செய்திகள் :

Tax: ``உங்கள் வாதமே தவறானது; திசை திருப்பாதீர்கள்..'' - திமுகவுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

post image

சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டதுடன், திமுக அரசு வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராகப் பேசினார்.

உங்கள் வாதமே தவறானது..

நிர்மலா சீதாராமன், "தமிழ் நாட்டில் இருந்து நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். நாங்கள் தரும் ஒரு ரூபாய் வரிக்கு 7 பைசா தான் பெறுகிறோம்... போன்ற வாதங்களை வைக்கின்றனர். இந்த நம்பர் (தரவுகள்) எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.

நிர்மலா சீதாராமன்

உங்களுக்கு கொடுக்கப்படும் ரோடு, மெட்ரொ எல்லாம் எங்கிருந்து வருகிறது? நாட்டில் அதிகமாக உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (Productive Linked Incentive - PLI) இங்குதான் கொடுக்கப்படுகிறது.

"இந்தியாவின் 25% எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் PLI வருகிறது, அது எங்கிருந்து வருகிறது?

ஜனரஞ்சகமாக நாங்கள் இவ்வளவு கொடுக்கிறோம், எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறானது. அவர்களது கால்குலேஷன் எங்கிருந்து வருகிறது என்றே எனக்குப் புரியவில்லை." எனப் பேசினார்.

நிர்மலா சீதாராமன்

சென்னை, கோயம்புத்தூரை சுட்டிக்காட்டிய Nirmala Sitharaman

"இங்கு கோயம்புத்துர்காரர்களும் சென்னைக்காரர்களும் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு அதிகம் வரிகொடுப்பது கோயம்புத்தூரும் சென்னையும் தான்.

இப்போது கோவில்பட்டிகாரர்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்கும்போது, கோயம்புத்தூர்காரர்கள், நாங்கள்தான் வரிகொடுத்தோம், எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கேட்க வேண்டுமா? 'கோவில்பட்டி எக்கேடு கேட்டால் எனக்கென்ன, அவர்களுக்கு செலவு செய்யக் கூடாது' என சொல்லணுமா? அப்படிப்பட்ட கொள்கை இல்லை பாரத நாட்டில்." என்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு கூடட்டம்

மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை

"அதனால் இதுபோல குதர்க்கமாக பேசுபவர்கள் நான் பட்டியலிடுபவற்றை கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு சொல்ல வேண்டும், எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்று.

தமிழ்நாட்டுக்கு செய்யவேண்டியவை எத்தனையோ இருந்தாலும், மும்மொழிக் கொள்கை, தொகுதிவரையறை என திசை திருப்பும் வேலைகளை செய்கின்றனர். நாங்கள் மத்திய அரசின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவோ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்." எனப் பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க

`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக... மேலும் பார்க்க