செய்திகள் :

Thandel: "கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பு..." - மகன் நாக சைதன்யாவைப் பாராட்டிய நாகர்ஜுனா

post image
‘தண்டேல்’ படம் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி இருக்கிறார்.

கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில்  மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்துக்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம் வெளியான ‘தண்டேல்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தண்டேல்
தண்டேல்

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.  அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நாக சைதன்யா உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பை என்னால் பார்க்க முடிகிறது. ‘தண்டேல்’ ஒரு சாதாரண படமல்ல.

உனது ஆர்வத்திற்கும், பெரிய கனவுகளைக் காணும் துணிவுக்கும், உன் கடுமையான உழைப்புக்கும் ஒரு சாட்சி. ‘தண்டேல்’ படத்தின் வெற்றியில் ரசிகர்களுக்கும் பங்குண்டு. உங்கள் முடிவில்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

அல்லு அரவிந்த் மற்றும் பன்னி ஆகியோருக்குப் பெரிய நன்றி. இந்த தருணத்தை மாற்ற முடியாதவையாக ஆக்கியதற்கு அற்புதமான திறமை கொண்ட சாய் பல்லவி, இனிய திறமைமிக்க தேவி ஸ்ரீபிரசாத், புது நட்சத்திர இயக்குநர் சந்து மொண்டட்டி மற்றும் அற்புதமான ‘தண்டேல்’ படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Darshan: ``என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்..." - ரசிகர்களிடம் நடிகர் தர்ஷன் வேண்டுகோள்!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரின் ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரின் காதலி நடிகை பவித்ராவும் கைது செய்யப்பட்டு சிறையில்... மேலும் பார்க்க

``நான் ஏன் குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்!'' - எதிர்மறையான விமர்சனங்களுக்கு நாக சைதன்யா பதிலடி

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `தண்டேல்'.நாக சைதன்யா - சமந்தா தம்பதி தங்களின் திருமண வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். இச... மேலும் பார்க்க

ரஜினி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கோவாவில் தற்கொலை - போலீஸ் விசாரணை!

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி (44) தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ரஜினி நடித்த கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் மேலும் பிரபல... மேலும் பார்க்க

கீரவாணி வீட்டு கல்யாணம்; ராஜமௌலி செலெக்ட் செய்த 'மாதம்பட்டி விருந்து' - என்னென்ன உணவுகள் இருந்தன?

ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் இளையமகன் நடிகர் சிம்ஹா கொடுரியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி யு.ஏ.இ-யில் நடைபெற்றது. மூத்த நடிகர் முரளி மோகனின் பேத்தி ராக மாதங்கியை மணந்தார்.இந்த த... மேலும் பார்க்க

Rashmika Mandanna: 'இதுபோதும்; சந்தோஷமாக ஓய்வு பெற தயார் என்றேன்' - ராஷ்மிகா பேசியது என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமா... மேலும் பார்க்க

Ram Gopal Varma:``சத்யா படத்தின் வெற்றி என்னைக் கண்மூடித்தனமாக்கியது''- ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான `சத்யா' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்த்த பிறகு ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் நீ... மேலும் பார்க்க